கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தின் மேக்கிங்க் வீடியோ.. இதோ பாருங்க!!

வருடங்களே உருண்டோடினாலும் விண்ணைத் தாண்டி வருவாயா காதலர்கள் மத்தியில் கொண்டாடப்படும் ஒரு படமாகும். தற்போது விண்ணைத் தாண்டி வருவாயா பார்ட் 2 எடுக்கத் திட்டமிட்டுள்ள கௌதம் மேனன், அதன் முன்னோட்டமாக கார்த்திக் டயல் செய்த…

வருடங்களே உருண்டோடினாலும் விண்ணைத் தாண்டி வருவாயா காதலர்கள் மத்தியில் கொண்டாடப்படும் ஒரு படமாகும். தற்போது விண்ணைத் தாண்டி வருவாயா பார்ட் 2 எடுக்கத் திட்டமிட்டுள்ள கௌதம் மேனன், அதன் முன்னோட்டமாக கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்தநிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோதும் இக்குறும்படம் எப்படிப் படமாக்கப்பட்டது என்பது குறித்த மேக்கிங்க் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மே மாதத் துவக்கத்தில் நடிகை த்ரிஷா ஒரு வீடியோவினை வெளியிட்டு இருந்தார். அதாவது கௌதம் மேனன் த்ரிஷாவிற்கு ஆப்பிள் ஐபோன் கேமராவில் புகைப்படம் எடுப்பது குறித்து விளக்கம் கொடுத்து இருப்பார்.

800c64fb2b19b6066a3e524408735fbe

சிம்பு-  கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்துள்ளார் த்ரிஷா. இந்தப் படம் இளைஞர்களின் மனம் கவர்ந்த படமாக பார்க்கப்பட்டது.

அதாவது த்ரிஷாவிற்கு கௌதம் மேனன் எப்படி ஆப்பிள் ஐபோனில் புகைப்படம் எடுப்பது என்பது குறித்து கற்றுத் தந்த அந்த வீடியோதான் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தினை எவ்வாறு ஷுட் செய்வது என்று சொல்லிக் கொடுத்த வீடியோவாகும்.

அதேபோல் சிம்புவுடன் இந்தப் படம் எடுப்பது குறித்து சில விஷயங்களை வீடியோ காலில் கௌதம் மேனன் கூறும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன