சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் கோவை ஈஷா மையத்தில் வருடாவருடம் மகாசிவராத்திரி பிரம்மாண்டமாக நடப்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள், அரசியல்வாதிகள், வி.ஐ.பி கள், நடிகர் நடிகைகள், வெளிநாட்டவர்கள், பொதுமக்கள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வர்.
மகாசிவராத்திரியின் நோக்கம் இரவு முழுவதும் விழித்திருந்து சிவபெருமானை வழிபடுவது தான். அதன்படி ஈஷா யோகா மையத்தில் பிரம்மாண்ட ஆதி யோகி சிலை முன்பு இரவு முழுவதும் தியானம், பாரம்பரிய நடனம், பக்தி இசை கச்சேரி போன்றவைகள் நடக்கும்.
அந்த வகையில், பல முக்கிய பிரபலங்கள் ஈஷா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டுள்ளனர். பிரதமர்நரேந்திர மோடி அவர்கள் கூட ஒருமுறை கலந்து கொண்டிருக்கிறார். இந்த வருடம் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, திரிபுரா ஆளுநர் இந்திரா சேனா ரெட்டி, தமிழக இணை அமைச்சர் எல். முருகன், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நடிகர் நடிகைகளும் மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உண்டு. நடிகைகள் சமந்தா,காஜல் அகர்வால், தமன்னா போன்றோர் தவறாமல் கலந்து கொள்வது வழக்கம். ஏற்கனவே நடிகைகள் சமந்தா மற்றும் காஜல் அகர்வாலுடன் சத்குரு அவர்கள் நடனமாடிய வீடியோ வைரலாகி உள்ளது. தற்போது நடிகை தமன்னா, நடிகை பூஜா ஹெக்டே, நடிகர் சந்தானம் ஆகியோர் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனின் பக்தி இசை கச்சேரி அனைவரையும் நடனமாட வைத்தது. அதிகாலை பிரம்ம முஹுர்த்தத்தின் போது நடந்த தியான நிகழ்வில் நடிகர் சந்தானம் மனமுருகி கண்ணீர் சிந்த சிவபெருமானை வழிபட்ட வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. தமன்னா மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் மெய் மறந்து இறைவனை துதித்து தியானித்ததும் அந்த காணொளியில் இடம் பெற்றிருந்தது.