பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது.
இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் விருதுகள் வழங்கினார் கமல் ஹாசன்.
இதில், முகென் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு டிராபி மற்றும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
அதன்பின்னர் முகின், தர்சன், கவின், அபிராமி ஆகியோர் சாண்டியின் வீட்டிற்கு சென்று பார்ட்டி கொண்டாடினர், மறுபுறம் ஷெரினும் ஷாக்சியும் பார்ட்டி கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மதுமிதா ரசிகர்கள் பலரும், பாதிக்கப்பட்ட மதுமிதாவை ஏன் யாரும் போய் பார்க்கவில்லை என்று கேட்டு வருகின்றனர்.
மதுமிதா மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றபோதும், இவர்கள் ஆறுதல் கூறவில்லை. குறைந்தபட்சம் வெளியில் வந்தபின்னர் போய் பார்த்து வந்திருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.
தர்சன் மற்றும் முகின் நிச்சயம் மதுமிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க செல்வார்கள் என்று பலரும் எதிர்பார்த்திருக்க இது ஏமாற்றமாகவே முடிந்துள்ளது.