பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது.
இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் விருதுகள் வழங்கினார் கமல் ஹாசன்.
இதில், முகென் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு டிராபி மற்றும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் இருவருக்கு அழைப்பு விடுக்கவில்லை விஜய் டிவி. அதாவது மதுமிதாவுக்கும், சரவணனுக்கும் அழைப்பு விடுக்கவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறிய போட்டியாளர்கள் பலமுறை மீண்டும் சிறப்பு விருந்தினராக சென்றனர். ஆனால் பலரின் எதிர்பார்ப்பு மதுமிதா மற்றும் சரவணன் வருவார்களா? என்பதாகவே இருந்தது. ஆனால் அவர்கள் வரவில்லை.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் பிரமாண்ட இறுதி விழாவில் பலரும் கலந்துகொள்ள, இவர்கள் இருவர் மட்டும் கலந்துகொள்ளவில்லை, தற்போது இதுகுறித்து மதுமிதாவின் கணவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அது நடக்கவில்லை என்று கூறி வருத்தம் தெரிவித்துள்ளார்.