மாதவன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த மாதவன் 2000 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்து பிரபலமாக ஆனார் மாதவன். அதைத் தொடர்ந்து என்னவளே, மின்னலே, டும்டும்டும், கன்னத்தில் முத்தமிட்டால், ரன் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்தார் மாதவன். இவளுக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் இருந்தனர்.
தொடர்ந்து பிரியமான தோழி, ஜே ஜே, லேசா லேசா, ஆயுத எழுத்து, தம்பி, எவனோ ஒருவன், வாழ்த்துக்கள் போன்ற திரைப்படங்களில் நடித்தார் மாதவன். 2009 காலகட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு அமையவில்லை என்பதால் தெலுங்கு ஹிந்தி மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்தார் மாதவன். தற்போது நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் மாதவன். இந்த திரைப்படம் விரைவில் தமிழில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட மாதவன் அனுஷ்கா ஷர்மாவை பற்றி ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோ நான் விராட் கோலியின் ரசிகன் என்று கூறும் ஒரு வீடியோ இன்ஸ்டாகிராமில் வந்தது. அதை நான் என்னுடைய instagram கணக்கில் பகிர்ந்தேன். அதை பார்த்த அனுஷ்கா ஷர்மா எனக்கு மெசேஜ் செய்து இது AI வீடியோ ஒரிஜினல் இல்லை சார் என்று கூறிவிட்டார். எனக்கு ரொம்ப அவமானமாக போயிடுச்சு என்று பகிர்ந்து இருக்கிறார் மாதவன்.