சினிமாவை பற்றி மக்களோட டேஸ்ட் இப்போ இப்படிதான் இருக்கு… மனம் திறந்த நடிகர் மாதவன்…

மாதவன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவர் தமிழ் ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 2000 ஆம் ஆண்டு அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயனாக…

madhavan

மாதவன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவர் தமிழ் ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 2000 ஆம் ஆண்டு அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயனாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. சிறந்த ஆண் அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார் மாதவன்.

தொடர்ந்து ரன், கன்னத்தில் முத்தமிட்டால், அன்பே சிவம், ஆய்த எழுத்து, மின்னலே, லேசா லேசா, பிரியமான தோழி, ஜே ஜே போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து 2000 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் மாதவன்.

2010 காலகட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு சரிவர வாய்ப்புகள் அமையவில்லை. அவ்வபோது கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வருகிறார் மாதவன். தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட மாதவன் இன்றைய காலகட்டத்தில் சினிமாவை பற்றி மக்களின் டேஸ்ட் எப்படி இருக்கிறது என்பதை பகிர்ந்து இருக்கிறார்.

மாதவன் கூறியது என்னவென்றால் இன்றைய காலகட்டத்தில் சினிமாவை பற்றிய மக்களின் டேஸ்ட் முற்றிலுமாக மாறிவிட்டது. எந்த படம் ஓடும் என்று எதிர்பார்க்கிறோமோ அது ஓடுவதில்லை. எந்த படம் ஓடாது என்று நினைக்கிறோமோ அது பயங்கரமாக ஓடி வசூல் சாதனை படைக்கிறது. மக்கள் வித்தியாசமாக எதிர்பார்க்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது என்று பகிர்ந்திருக்கிறார் மாதவன்.