சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாக உள்ள மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறும் என தயாரிப்பாளர் தனது டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்
இந்த நிலையில் இந்த திட்டத்தில் தற்போது திடீரென ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடப்பதற்குப் பதிலாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
கோவையில் சிம்பு படத்தின் மாநாடு படப்பிடிப்பு நடந்தால் சிம்புவை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு இருப்பதாக கோவை ரசிகர்கள் கருதியிருந்த நிலையில் தற்போது திடீரென இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் கோவை சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது