இந்த ஹிட் பாட்டெல்லாம் இவங்க எழுதியதா? இது தெரியாமப் போச்சே..!

By John A

Published:

தமிழ் சினிமாவில் கே.பி.சுந்தராம்பாளுக்கு அடுத்தபடியாக ஆண் கவிஞர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது. கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், பிறைசூடன், கங்கை அமரன், வைரமுத்து, பா.விஜய், அறிவுமதி, சிநேகன் போன்ற கவிஞர்கள் புகழ் பெற்ற பாடல்கள் வரிசையாக தங்களது ஆதிக்கத்தைச் செலுத்திவர இதழாய் மலர்ந்தவர் தான் தாமரை.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் தாமரை அடிப்படையில் பொறியியல் பட்டதாரி. ஆனால் எழுத்தின் மீது கொண்ட பேரார்வம் காரணமாக சென்னையில் வந்து பல எழுத்தாளர்களிடமும், கவிஞர்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். பல்வேறு சிறுகதைத் தொகுப்புகளையும், கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ள தாமரைக்கு முதன்முதலாக வாய்ப்புக் கொடுத்தவர் சீமான். இனியவளே என்ற படத்தில் தேனிசைத் தென்றல் தேவாவின் மெட்டுக்களுக்கு பாடல்கள் இயற்றத் தொடங்கினார் தாமரை.

பிறமொழிச் சொற்கள் கலவாமல் முற்றிலும் அழகிய தமிழ்ச் சொற்களை வைத்தே பாடல் இயற்றி அதை ஹிட்டாக்குவதில் வல்லவரான தாமரையின் திரைப்பயணம் கௌதவ் வாசுதேவ் மேனனின் வருகைக்குப் பின் உச்சத்தில் ஏறியது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் முதல் படமான மின்னலே படத்தில் இடம்பெற்ற ‘வசீகரா என் நெஞ்சில் நிக்க..‘ என்ற பாடல் அப்போதுள்ள இசைப் பிரியர்களுக்கு புது அனுபவத்தைத் தர பாடல் ஹிட் ஆனது.

வேண்டாம் என ஒதுக்கிய கிரேஸ் : ஆனாலும் கைகூடிய காதல் : கருணாஸ் போட்ட மந்திரம் இதான்

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இந்த மெலடிப் பாடலின் தாக்கம் இன்னும் சோஷியல் மீடியாவில் குறையவில்லை என்றே சொல்லலாம். எப்படி இளையராஜா  – வைரமுத்து – பாராதிராஜா கூட்டணி பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்ததோ அதே வரிசையில் இணைந்தனர் தாமரை – ஹாரிஸ் – கௌதம்வாசுதேவ் மேனன் கூட்டணி. இந்தக் கூட்டணி தொடர்ந்து பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்தது.

Tamarai

அதிலும் குறிப்பாக காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக் கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால், துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் வந்த பாடல்கள் இவர்களின் வெற்றிக்கு சிறந்த உதாரணமாகும்.

அதன்பின் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கௌதம் இணைய விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களிலும் தாமரை பாடல்களை இயற்றி தமிழ் சினிமாவிலும், இலக்கியத்திலும் புகழ்பெற்ற நபராக மாறினார். பின்னர் பொதுவுடைமை சிந்தாந்தங்களில் ஈடுபாடு கொண்டவரான தோழர் தியாகு என்பவரை மணம் முடித்து அதன்பின் விவாகரத்துப் பெற்றார்.

இவருக்கு சமரன் என்ற மகன் உள்ளார். அவரும் தாயைப் போலவே இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்கிறார். கவிஞர் தாமரை நனி சைவம், அதாவது புலால் உண்ணாமை உணவு முறையைக் கடைப்பிடிக்கிறார்.

இவ்வாறு தமிழோடு கலந்து ரசிகர்கள் மனதில் அவரின் பாடல் வரிகளால் என்றும் நிறைந்திருக்கும் கவிஞர் தாமரைக்கு இன்று பிறந்த நாள். நாமும் வாழ்த்துவோம்.