ரஜினி, கமலுக்கு அடுத்த படியாக யார் இவர்கள் இடத்தை நிரப்பப் போவது என்றிருந்த வேளையில் தமிழில முதல் எழுத்தான ‘அ‘ விலும் ‘அ‘ எனத் தொடங்கும் தனது பெயரிலும் திரைவாழ்க்கையை ஆரம்பித்தவர் தான் அஜீத். அறிமுகமான முதல் படம் தமிழில் அமராவதி. அதற்கு முன் தெலுங்கில் பிரேம புஸ்தகம் என்ற படத்திலேயே அறிமுகமாகி இருக்கிறார். இன்று தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாகத் திகழ்கிறார் அஜீத்.
இயக்குநர் செல்வா இயக்கத்தில் கடந்த 1993-ல் வெளியான இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக சங்கவி நடித்திருந்தார். பாலபாரதியின் இசையில் வைரமுத்துவின் வரிகளில் இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. இப்படத்தில் அஜீத்துக்கு முதன் முதலாக அமைந்த டூயட் பாடலான தாஜ்மகால் தேவையில்லை அன்னமே அன்னமே.. என்ற பாடல் உருவான விதம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் வைரமுத்து கூறிய போது, “தமிழில் அஜீத்தின் முதல்படமான அமராவதியில் நான் எழுதிய பாடலான தாஜ்மஹால் தேவையில்லை பாடல் ஜாகிர் என்பவரின் இந்திக் கவிதையை மனதில் வைத்து எழுதியதாம்.
இப்படிப்பட்ட பாட்டெல்லாம் எழுதியது இவரா? மனுஷன் என்னமா எழுதியிருக்காரு பாருங்க.. கவிஞன்டா..!
ஜாகீரின் கவிதையில் குறிப்பிடும் போது நாளை தாஜ்மகால் வா சந்திக்கலாம் என்று காதலியிடம் கூற, பின் வேண்டாம் வேண்டாம் தாஜ்மகால் மக்கள் வரிப்பணத்தில் கட்டியது. அது ஷாஜகான் சொந்தமாகக் கட்டவில்லை. ஆகவே அவருடைய காதலைக் காட்டிலும் நம் காதல் மேலானது ஆகவே இயற்கை சார்ந்த இடங்களில் சந்திக்கலாம் என்று அந்தக் கவிதையில் பொருள் வருமாம்.
இதை மனதில் வைத்து யோசித்து எழுதிய வைரமுத்து தாஜ்மகாலை காதலின் நினைவுச்சின்னமாக வைத்து எத்தனையோ பாடல்கள் உருவாயிருக்கலாம். ஆனால் நம் காதலுக்கு இந்த காடு, மலை, நதிகள் தான் நினைவுச் சின்னங்கள் என்று
தாஜ்மகால் தேவையில்லை, அன்னமே, அன்னமே..
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே.. என்று எழுதினேன்.“ இவ்வாறு வைரமுத்து அந்தப் பாடல் பிறந்த கதையைப் பற்றிக் கூறினார்.
இந்தப் பாடல் இன்று சிறந்த ஒரு மெலடி டூயட் பாடலாக விளங்குகிறது. அஜீத்துக்கு முதல் படத்திலேயே பெண் ரசிகைகளை அதிகம் பெற்றுத் தந்து ஹிட் லிஸ்ட்டில் இடம் பிடித்தது இந்தப் பாடல்.