பாடலாசிரியர், நடிகர், மக்கள் நீதி மய்யம் நிர்வாகி உள்ளிட்ட பல முகங்களைக் கொண்டவர் சினேகன். இவரது மனைவி கன்னிகாவும் இலக்கியம், நடிப்பு, ஓவியம் என பிஸியாக இருக்கிறார். இவர்கள் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரும் தங்கள் அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை வீடியோவாக வெளியிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இவர்களை சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்கள் அதிகம். மேலும் சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெகு பிரபலம் ஆனார். மேலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டார்.
அடிக்கடி சினேகனின் சொந்த ஊர் சென்று அங்கு தோட்டம், விவசாயம், கிராமத்து சமையல் என தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை இனிமையாகக் கொண்டாடி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கன்னிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாகப் பதிவிட்டிருக்கிறார். சினேகனும், கன்னிகாவும் 8 ஆண்டுகளாகக் காதலித்து பின்னர் கடந்த 2021-ல் மக்கள்நீதி மய்யம் தலைவரும், உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் தற்போது கன்னிகா கர்ப்பமுற்றிப்பதை தனது “நாங்க அப்பா அம்மா ஆகபோறோம்….
உங்கள் எல்லோருடைய அன்பும் வாழ்த்தும் வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.