வைரமுத்து வரிகளில் திருப்தி ஆகாத இயக்குநர் விக்ரமன்..உருவான புதிய பாடலாசிரியர்..இதெல்லாம் இவரோட பாட்டுக்களா?

By John A

Published:

தமிழ் சினிமாவில் குடும்பக் கதைகளின் மன்னன் என்றால் அவர் இயக்குநர் விக்ரமன் தான். தனது படங்களில் காமெடி, சென்டிமெண்ட், இனிமையான இசை, சிறந்த பொழுதுபோக்கு, அலட்டாத சண்டைக் காட்சிகள் என அனைத்தும் கலந்து குடும்பத்துடன் மொத்தமாக அமர்ந்து பார்க்கும் வகையில் பல எவர்கிரீன் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார்.

இவரது இயக்கத்தில் 1994-ல் வெளிவந்த திரைப்படம் தான் புதிய மன்னர்கள். தனது பாணியிலிருந்து சற்றே விலகி இப்படத்தினை இயக்கினார் விக்ரமன். ஆனால் இந்தப் படம் தோல்வியைத் தழுவியது.இருப்பினும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகின. காரணம் ஏ.ஆர்.ரஹ்மான்.

இப்படத்திற்கான பாடல்களை முதலில் எழுதியவர் கவிஞர் வைரமுத்து. ஆனால் இயக்குநர் விக்ரமனுக்கு வைரமுத்துவின் வரிகள் திருப்தி ஆகவில்லை. இதனால் தன் நண்பர் ஒருவர் கவிஞர் பழனிபாரதியை விக்ரமனுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். புதிய மன்னர்கள் படத்திற்கு முன்பாகவே கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பெரும்புள்ளி போன்ற படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார் பழனிபாரதி. இதனையடுத்து புதிய மன்னர்கள் படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

அவங்களுக்காக தான் இந்த முடிவை எடுக்குறேன்.. மனைவி ஆர்த்தியுடனான உறவை முறித்த ஜெயம் ரவி.. காரணம் இதுவா..

ஏ.ஆர். ரஹ்மானிடம் அப்போது பல படங்களில் தயாரிப்பு மேலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காமெடி நடிகர் பாவா லட்சுமணன் பழனிபாரதியை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் காட்சியைச் சொன்னதும் பழனிபாரதி மளமளவென பாடல்களை எழுதினார். அப்படி புதிய மன்னர்கள் படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான பாடல் தான் ‘நீ கட்டும் சேலை மடிப்புல நான் கிறங்கி போனேன்டி.. பாடல்..

இந்தப் பாடல் இன்றும் சிறந்த கிராமத்துக் குத்துப் பாடலாக ஒலிக்கிறது. மேலும் தன்னம்பிக்கைப் பாடலான எடுடா அந்த சூரிய மேளம்.. அடிடா அந்த வாலிபத் தாளம்.. போன்ற பாடல்கள் பழனிபாரதியின் வரிகளில் உருவாகி ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து விக்ரமனின் பல படங்களில் பழனி பாரதி பாடல்களை எழுதினார். இவரது பாடல்கள் சூப்பர் ஹிட் ஆக, தொடர்ந்து பல படங்களில் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது.

பழனிபாரதியின் பிளே லிஸ்ட்டில் காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, மேட்டுக்குடி, சூர்ய வம்சம், உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், நினைத்தேன் வந்தாய், அவள் வருவாளா என பல சூப்பர் ஹிட் படங்களின் பாடல்களைக் குறிப்பிடலாம். குறிப்பாக அஜீத், விஜய், கார்த்திக், சரத்குமார் உள்ளிட்டோருக்கு நிறைய ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார் பழனிபாரதி.