‘தர்பார்’ திரைப்படத்தின் லாபம் மட்டும் ரூ.100 கோடியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு கடந்த 9ஆம் தேதி வெளியான நிலையில் நான்கு நாட்களில் இந்த படம் ரூபாய் 150 கோடி வசூல் செய்து…


bf8cbf0cf782a2d375da7c077dd46505

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு கடந்த 9ஆம் தேதி வெளியான நிலையில் நான்கு நாட்களில் இந்த படம் ரூபாய் 150 கோடி வசூல் செய்து விட்டதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் உலகம் முழுவதும் இந்த படம் 150 கோடி வசூல் செய்துள்ளதாகவும் இதனை அடுத்து இந்தப் படம் தனது மொத்த பட்ஜெட்டை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் உரிமைகள், டிஜிட்டல் உரிமைகள் மற்றும் ஆடியோ உரிமைகள் ஆகியவைகளை சேர்த்தால் இந்த படத்தின் பட்ஜெட் தொகை தற்போது லைகாவிற்கு கிடைத்து விட்டதாகவும் இனி வரும் வசூல் அனைத்தும் லாபம் என்று கூறப்படுகிறது

நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பொங்கல் விடுமுறை என்பதால் இந்த விடுமுறையில் இந்த படம் வசூலை அள்ளிக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து இந்த படம் குறைந்தது 100 கோடி ரூபாய் லாபம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன