குத்துப்பாட்டு முதல் அம்மன் பாட்டு வரை… திருமணமே செய்து கொள்ளாத பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி!

தமிழகத்தில் உள்ள அனைத்து திருமண வீட்டிலும் வாராயோ என் தோழி வாராயோ என்ற பாடல் பாடாமல் இருக்காது. அந்த பாடலுக்கு சொந்தக்காரர் தான் எல்.ஆர்.ஈஸ்வரி. ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்ட எல்.ஆர்.ஈஸ்வரி குடும்பத்தினர் பிழைப்புக்காக சென்னைக்கு…

ஈஸ்வரி

தமிழகத்தில் உள்ள அனைத்து திருமண வீட்டிலும் வாராயோ என் தோழி வாராயோ என்ற பாடல் பாடாமல் இருக்காது. அந்த பாடலுக்கு சொந்தக்காரர் தான் எல்.ஆர்.ஈஸ்வரி. ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்ட எல்.ஆர்.ஈஸ்வரி குடும்பத்தினர் பிழைப்புக்காக சென்னைக்கு குடியேறினார். எல்ஆர் ஈஸ்வரியின் தாத்தா ஒரு பாடகர் என்பதால் எல்ஆர் ஈஸ்வரியை சிறு வயதிலேயே பாட்டு நடனம் ஆகிவற்றை கற்றுக்கொண்டார்.

பள்ளியில் படிக்கும் போது எல்.ஆர்.ஈஸ்வரி பல பள்ளி நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார் இந்த நிலையில் எல்.ஆர்.ஈஸ்வரி 6 வயதாக இருக்கும் போது தந்தை தேவராஜ்  காலமானதால் . குடும்ப பாரத்தை எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் அவரது தாயார் சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் எல்.ஆர்.ஈஸ்வரி தாயாருக்கு கோரஸ் பாடகியாக பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தான் அவர் தனது குழந்தைகளை வளர்த்தார்.

lr eswari1

இந்த நிலையில் பத்தாம் வகுப்புடன் தனது படிப்பை நிறுத்திக் கொண்ட எல்ஆர் ஈஸ்வரி குடும்ப பாரத்தில் தானும் பங்கேற்க முடிவு செய்தார். தாயாருடன் சேர்ந்து அவரும் கோரஸ் பாடகியாக மாறினார். மனோகரா என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற இன்ப நாளிலே இதயம் தேடுதே என்ற பாடலை ஜிக்கி பாட, அந்த குழுவினர்களில் ஒருவராக எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார். இதே பாடலில் கோரஸ் பாடகியாக அவரது தாயாரும் பாடினார்.

டிகே பட்டம்மா முதல் சின்மயி வரை.. பாடகிகளின் முதல் தமிழ்ப்பாடல் பட்டியல்..!

இருவரும் கோரஸ் பாடல் பாடியதால் ஓரளவுக்கு வருமானம் கிடைத்து குடும்ப வறுமை நீங்கியது. இந்த நிலையில் தான் வடிவுக்கு வளைகாப்பு என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை பாடுவதற்காக தாயாருடன் சென்றபோது அந்த பாடலில் ஹம்மிங் கொடுக்க வேண்டிய பாடகி அன்று வராததால் எல்.ஆர்.ஈஸ்வரியை ஹம்மிங் கொடுக்க வைத்தனர். இதுவே முதல் முறையாக எல்.ஆர்.ஈஸ்வரி ஹம்மிங் பாடிய பாடல்.

இதனை அடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஏபி நாகராஜன் உன்னுடைய குரல் நன்றாக இருக்கிறது, கண்டிப்பாக உனக்கு அதிக வாய்ப்புகள் தருகிறேன் என்று கூறியதோடு இசையமைப்பாளர் கேவி மகாதேவனிடமும் அறிமுகப்படுத்தினார். கண்டிப்பாக நீ எதிர்காலத்தில் பெரிய பாடகியாக வருவாய் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.

lr eswari

இதனால் மகிழ்ச்சி அடைந்த எல்ஆர் ஈஸ்வரி விரைவில் குடும்ப கஷ்டம் தீரும் என்று நம்பிக்கை கொண்டார். இந்த நிலையில் தான் நல்ல இடத்து சம்பந்தம் என்ற திரைப்படத்தில் முதல் முதலாக தனியாக பாடல் பாடுவதற்கு எல்ஆர் ஈஸ்வரிக்கு வாய்ப்பு கிடைத்தது. நிமிர்ந்து பாரு உன் பிறந்த இடத்தை மறந்து விடாதே நினைத்து பாரு என்ற இந்த பாடல் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

தமிழ் திரை உலகில் பாடகிகளாக மாறிய நடிகைகள் யார் யார் தெரியுமா?

எல்ஆர் ஈஸ்வரிக்கு தமிழக முழுவதும் ரசிகர்கள் கிடைத்த பாடல் என்றால் அது பாசமலர் படத்தில் இடம்பெற்ற வாராயோ என் தோழி வாராயோ என்ற பாடல் தான். இந்த பாடலை கேட்ட பின்னர் தான் யார் இந்த பாடகி என்று பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். அதன்பிறகு எல்ஆர் ஈஸ்வரிக்கு நிற்கவே முடியாத அளவுக்கு பிசியானார், வருமானம் அதிகரித்தது, அவர் தனது குடும்பத்தினரை கஷ்டப்படாமல் பார்த்து கொண்டார்.

ஒரு கட்டத்தில் தனது தம்பி தங்கைகள் அம்மா அனைவரையும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே அவரது குறிக்கோளாக இருந்ததால் அவர் திருமணமே செய்யவில்லை. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னட, ஹிந்தி, துளு என பல மொழிகளில் இவர் பாடினார். அதுமட்டுமின்றி அம்மன் பாடல்கள் என தனி பாடல்களையும் பாடினார். இவரது அம்மன் பாடலை பார்க்கும்போது பலருக்கு சாமி ஆட்டம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Untitled 2

எல்ஆர் ஈஸ்வரி பாடிய பாடல்களில் புகழ்மிக்க பாடல் என்றால் முத்து குளிக்க வாரீங்களா, அவளுக்கு என்ன அழகிய முகம், மணமகளை மருமகளை வா வா ,கேட்டுக்கோடி உருமி மேளம் என அடுக்கி கொண்டே சொல்லலாம். திரைப்படங்களில் பாடுவது மட்டுமின்றி இசை நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டுள்ளார். இசை நிகழ்ச்சிகளில் பாடலை பாடுவது மட்டுமின்றி அந்த பாடலின் மெட்டுக்கேற்ற வகையில் ஆடுவதும் உண்டு.

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் குரலிற்கு அடிமையான எம்.ஜி.ஆர்.. அடிமைப்பெண் படத்தில் வாய்ப்பு கொடுத்தது எப்படி?

அதனால் எல்.ஆர். ஈஸ்வரி இசை நிகழ்ச்சி என்றாலே கூட்டம் அதிக அளவில் வரும். சமீபத்தில் கூட மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் அவர் ஒரு பாடலை பாடி இருப்பார்.  பிரியமுடன் பிரியா என்ற திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையிலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய எல்.ஆர்.ஈஸ்வரி இன்னும் பல பாடல்களை பாடி ஆரோக்கியமாக பல ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.