வெளியே போனதும் லாஸ்லியா செய்யும் முதல் வேலை இதுதான்!!

மதிய நேரம் பிக் பாஸ் வீட்டில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. பல்வேறு பத்திரிக்கைகளைச் சார்ந்த சுபா, சுதிர், மீனாட்சி, அனுபமா, விஜய், சந்திரசேகர், பிரியங்கா, அதிதி ஆகியோர் பங்குபெற்றனர். போட்டியாளர்களிடம் ஒவ்வொருவராக கேள்வி…

மதிய நேரம் பிக் பாஸ் வீட்டில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. பல்வேறு பத்திரிக்கைகளைச் சார்ந்த சுபா, சுதிர், மீனாட்சி, அனுபமா, விஜய், சந்திரசேகர், பிரியங்கா, அதிதி ஆகியோர் பங்குபெற்றனர்.

போட்டியாளர்களிடம் ஒவ்வொருவராக கேள்வி கேட்டனர்,  லாஸ்லியாவிடம் கேள்வி கேட்ட நிரூபர் ஒருவர், “வெளியே போய் முதல் வேலையாக என்ன பண்ண போகிறீர்கள்? என்ற கேட்டார்.

00d60d39463b689a885c0bce84819c7c

அப்போது நான் வெளியே சென்று என் பெற்றோருடன், நடந்த விஷயங்களைப் பற்றி பேச விரும்புகிறேன். அவர்கள் 1 மணிநேர நிகழ்ச்சியினைப் பார்த்து முடிவுக்கு வந்துள்ளனர்.

அதைப் பற்றி புரியவைத்தல் வேண்டும். உள்ளே நான் என்ன செய்தேன், எனக்கும் மற்றவர்களுக்குமான உறவினையும், அவர்களுடன் நான் பேசியதைப் பற்றியும் நான் பேசுவேன்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த நான், இந்த மாதிரியான நிகழ்ச்சியில் பங்குபெறுவதால் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வேன் என அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்” என்று பேசினார் லாஸ்லியா.

லாஸ்லியா பெற்றோர் நினைத்ததுதான் தவறு என்பதனை திரும்ப திரும்ப சுட்டிக் காட்டுகிறாரே தவிர தன்னுடைய தவறை உணரவில்லை.

எப்படியும் வீட்டிற்கு சென்று முதல் வேலையாக திருமணத்தைப் பற்றித்தான் பேசுவார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன