பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் கலந்துகொண்ட போட்டியாளர் ஒருவர் கவின். ஷாக்சியிடம் காதலை வெளிப்படுத்தி ரொமான்ஸ் செய்துவர, ஓரிரு நாட்களில் காதல் ப்ரேக் அப் ஆனது, உடனே லாஸ்லியாவிடம் பழகி அவரிடமும் காதலை வெளிப்படுத்தினார்.
1 மணி நேர நிகழ்ச்சியில் 30 நிமிடம் இவர்கள் காதலே ஓடும், இன்னொரு சரவணன்- மீனாட்சியாக உள்ளே வலம் வந்தனர்.
வெளியே வந்த இவர்கள் சந்தித்தாக தெரியவில்லை, ஆனால் லாஸ்லியா குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது பிக் பாஸ் கொண்டாட்டத்திற்கு போட்டியாளர்கள் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர்.
அந்தவகையில் லாஸ்லியா நடனப் பயிற்சி செய்துவருகிறார், பயிற்சி செய்யும் இடத்தில் கவின் பாடிய பாடலுக்கு ரசிகர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்த வீடியோவினை இன்ஸ்டாகிராமில் வெளிவிட, அனைவரும் எப்போது இருவரும் சந்திப்பீர்கள்? என்று கேட்டு வருகின்றனர்.