பெரிய ஹீரோக்கள் எல்லாம் வெற்றிமாறனை இப்படித்தான் பாக்குறாங்க… மனம் திறந்த இயக்குனர் லிங்குசாமி…

லிங்குசாமி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான திரைப்பட இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் லிங்குசாமி. 2001 ஆம் ஆண்டு மம்முட்டி முரளி ஆகியோரை வைத்து ஆனந்தம் திரைப்படத்தை இயக்கியதன்…

lingusamy

லிங்குசாமி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான திரைப்பட இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் லிங்குசாமி. 2001 ஆம் ஆண்டு மம்முட்டி முரளி ஆகியோரை வைத்து ஆனந்தம் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் லிங்குசாமி.

முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் லிங்குசாமி.

இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக தீபாவளி, கும்கி, இவன் வேற மாதிரி, உத்தமவில்லன், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார் லிங்குசாமி. சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட லிங்குசாமி வெற்றிமாறனை பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார்.

லிங்குசாமி கூறியது என்னவென்றால், ராம்சரண் அல்லு அர்ஜுன் ஜூனியர் என்டிஆர் போன்ற மற்ற மொழி பெரிய ஹீரோக்கள் யாரைப் பார்த்தாலும் வெற்றிமாறன் சாருடன் படம் பண்ண வேண்டும் என்று கூறுகிறார்கள். அவர் கூப்பிட்டால் அவர்களெல்லாம் ஓடி வந்து விடுவார்கள். அப்படி மற்ற திரை துறையினருக்கு வெற்றிமாறன் மீது அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் லிங்குசாமி.