பழம் பெரும் இந்தி நடிகையான ஆஷா பரேக்கிற்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய திரையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இந்த ஆண்டு பாலிவுட்டின் பழம் பெரும் நடிகையான ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.
பாலிவுட்டில் நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகை திறமையாளராக முத்திரை பதித்த, ஆஷா பரேக்கிற்கு விரைவில் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட உள்ளது.
79 வயதான ஆஷா பரேக் 1960 மற்றும் 1970களில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 1959ம் ஆண்டு முதல் 1973 வரை இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். குறிப்பாக மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல உயரிய விருதுகளைக் பெற்றுள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த சாதாரண குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் கலாச்சாரத்தை பறைசாற்றும் நடனங்களில் சிறந்து விளங்கிய இவர், சிறு வயது முதலே பல்வேறு விருதுகளை குவித்துள்ளார். தற்போது ஆஷா பரேக் மும்பையில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.