தமிழ் சினிமாவின் ஆரம்ப கால சினிமாவை எடுத்துக் கொண்டால் நமக்கு ஞாபகம் வரும் இசையமைப்பளார்கள் இருவர் தான் ஒருவர் கே.வி.மகாதேவன், மற்றொருவர் இரட்டை இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.வி.-ராமமூர்த்தி. இவர்கள் இருவரும் காலத்தால் அழியாத பல கானங்களைக் கொடுத்தார்கள் ஆயினும் இவர்களுக்கும் முன்னதாக சில இசையமைப்பாளர்கள் தேன் சிந்தும் பாடல்களைக் கொடுத்துள்ளனர். அவற்றில் ஒருவர்தான் லிங்கப்பா.
பி.சுசீலாவிற்கு மிகவும் புகழ் தேடி தந்த “அமுதைப்பொழியும் நிலவே” தங்கமலை ரகசியம் பாடல் இவரது இசையமைப்பே. பல வாத்திய கருவிகள் வாசிப்பதில் வல்லுனர் லிங்கப்பா பல பட நிறுவனங்களில் பணியாற்றினார். மார்டன் தியேட்டர்ஸ் போன்ற பிரம்மாண்ட நிறுவனத்தில் கே.வி.மகாதேவன் மற்றும் பாப்பாவுடன் கூட்டு சேர்ந்து வேலை செய்தார். பின் சுதர்ஸனம் மாஸ்டரிம் பணியாற்றினார். அதன்பின் தாம் ஒரு முழு இசையமைப்பாளராக 1950களில் உருவெடுத்தார் லிங்கப்பா.
டி.ஆர் மகாலிங்கமும் பந்துலுவும் சேர்ந்து தயாரித்த 1951’ல் வெளியான மோகன சுந்தரம் படத்தின் மூலம் இசையமைப்பாளரானார் லிங்கப்பா. பி.ஆர்.பந்துலு பத்மினி பிக்சர்ஸ் உருவாகி 1954’ல் “கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி” படத்திற்கு இசையமைத்து ஹிட் பாடல்களைக் கொடுத்து கவனிக்க வைத்தார் லிங்கப்பா. இப்படி பத்மினி பிக்சர்ஸ்ஸின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆனார் லிங்கப்பா.
கண்டபடி திட்டியவருக்கும் கைமாறு செய்த பொன்மனச் செம்மல்.. இருந்தாலும் இப்படி ஒரு இரக்க குணமா?
பந்துலு-லிங்கப்பா-கு.மா.பா வெற்றிக்கூட்டணியாக மாறியது. இன்றும் லிங்கப்பாவின் பெயர் சொல்லும் சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு பாடல் என்றால் அது அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ.. என்ற பாடல்தான். தேன் குரலால் சுசீலாவின் தேவகானமாக இன்றும் நம் செவிக்கு விருந்தாகிக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை. இதே படத்தை பல மொழிகளிலும் இசையமைத்தவர் லிங்கப்பா.
அடுத்து சபாஷ் மீனா.. இது லிங்கப்பாவிற்கு பெரும் புகழ் தேடி தந்த படம்
கு.மா.பாவின் வரிகள், சித்திரம் பேசுதடி, காணா இன்பம் என வெளுத்து வாங்கினார்.
இதனையடுத்து எல்லோரும் இந்நாட்டு மன்னர் படத்தில் இவரது பாடல்கள் குறிப்பாக பட்டுக்கோட்டையாரின் என் அருமை காதலிக்கு வெண்ணிலாவே, மனமென்னும் வாணிலே மழை மேகமாகவே பாடல்கள் தெள்ளமுது.
அற்புதமான இதுபோன்ற பல பாடல்களைத்தந்த இசையமைப்பாளர் டி ஜி லிங்கப்பா என்றென்றும் நம்மோடு நிலைத்து நிற்பார் அவரின் பாடல்கள் மூலம். ஆனால் தமிழ் சினிமா அவரைச் சரியாகக் கொண்டாடப்படாதது ஒரு குறையே.