எம்.ஆர்.ராதாவுடன் காட்சியா? அலறி ஓடிய உச்ச நடிகர்கள்.. இதான் காரணமா?

By John A

Published:

ரத்தக் கண்ணீர் காவியத்தை தமிழ் சினிமா என்றும் மறக்காதோ அதேபோல்தான் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நடிப்புத் திறனும்.  ரத்தக்கண்ணீர் படம் இந்திய சினிமா வரலாற்றில் மைல் கல்லாக அமைந்து நடிப்புக்கு இலக்கணம் வகுத்தது. உச்ச நட்சத்திரங்கள் அத்தனை பேரையும் தனது அபார நடிப்பாலும் வசனங்களாலும், தூக்கி சாப்பிட்டவர் பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதா.

எம்.ஆர். ராதா நாடக மேடைகளில் வாழ்ந்தவர். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒருபோதும் நடித்திராதவர். நாடகக்காரர், பகுத்தறிவுவாதி, சினிமா நடிகர், பெரியாரின் தொண்டர், அதிரடிப் பேச்சாளார், குடும்பத் தலைவர் என்று பன்முகம் உள்ளது. சிறையிலும் தனது வாழ்க்கையின் சில நாட்களைக் கழித்தவர்.

எம்.ஆர்.ராதாவின் திறமையை பற்றி ஒரு மேடையில் நடிகர் திலகம் கூறும் போது, “ஒரு ஃப்ரேமில் என் முகமும் அண்ணன் ராதாவின் முகமும் அருகருகே வந்தால், நான் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பேன். ஒரு நொடியில் சின்ன அசைவில் நம்மை காலி செய்து விடுவார்.” எனக் கூறினார்.

“எதுக்குப்பா இந்தப் பட்டம் இனிமே இப்படி போடாதீங்க..!” ஆர்டர் போட்ட சத்யராஜ்

மேலும் ‘பாகப்பிரிவினை’ படத்தை இந்தியில் எடுத்தபோது சுனில்தத் சொன்னாராம், “சிவாஜியின் பாத்திரத்தை திலீப்குமார் செய்கிறார். ஆனால் ராதாவின் ‘சிங்கப்பூர் சிங்காரம்’ பாத்திரத்தைச் செய்ய யாராலும் முடியாது” என்று. பாகப்பிரிவினையைத் தெலுங்கில் எடுத்தபோது இதையேதான் என்.டி.ஆரும் சொன்னார். ராதாபோல் செய்ய தெலுங்கில் ஆள் இல்லை என்று.

MR Radha

எம்.ஆர்.ராதாவின் குரலில் உள்ள ஏற்றமும் இறக்கமும் திடீரெனக் காட்டும் மாடுலேஷனும், அந்தக் குரலின் மாயவித்தைகளை முகத்திலும் காட்டத் தெரிந்த பாவனைகளும் யாரிடமும் கற்காத ராதாவின் சொந்தக் கண்டுபிடிப்புகள்.

ஒரே காட்சியில் மிகை நடிப்பு, யதார்த்த நடிப்பு, கீழ் நடிப்பு என்று எல்லா நடிப்பு வகைகளையும் காட்டிக்கொண்டே எல்லாவற்றையும் கலந்த ஒரு புதுவகை நடிப்பையும் மக்கள் ரசிக்கும்படி வெளிப்படுத்தியதால்தான் அவரை ‘நடிகவேள்’ என்ற பட்டம் கொடுத்து கொண்டாடினர் ரசிகர்கள்.

தயாரிப்பாளர்களின் ஹீரோ இவர்தானா? சம்பளத்தை கண்டுக்கவே மாட்டராமே..!

அதனால்தான் எத்தனைமுறை பார்த்தாலும் ராதாவின் நடிப்பு சலிப்பதேயில்லை. சினிமாவில் எல்லா நடிகர்களும் சுத்தத் தமிழ் பேசிய காலத்திலேயே ராதா மட்டும்தான் கொச்சைத் தமிழ் பேசுவார். அந்தக் கொச்சைத் தமிழ் மக்களைச் சுத்தமாக்கியதுதான் வரலாறு.

பலேபாண்டியா படத்தில் “மாமா மாப்ளே” பாட்டில் முதல்வரியை இப்படித்தான் தொடங்குவார் சிவாஜி, “நீயே என்றும் உனக்கு நிகரானவன்…” அந்த வரி எம்.ஆர்.ராதாவுக்கு முற்றிலும் பொருந்தும் என்றால் அது மிகையாகாது.