வசூல் வேட்டையில் ‘லீடர்’: மூன்றே நாட்களில் ரூ. 25 கோடி! அண்ணாச்சியின் அதிரடி கம்பேக்!

தமிழகத்தின் பிரபல தொழிலதிபர் ‘லெஜண்ட்’ சரவணன், வெள்ளித்திரையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை மிகவும் பலமாக தொடங்கியுள்ளார். துரை செந்தில்குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படம், திரையரங்குகளில் ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்று வசூல்…

leader11

தமிழகத்தின் பிரபல தொழிலதிபர் ‘லெஜண்ட்’ சரவணன், வெள்ளித்திரையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை மிகவும் பலமாக தொடங்கியுள்ளார். துரை செந்தில்குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படம், திரையரங்குகளில் ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்று வசூல் மழையில் நனைந்து வருகிறது.

தனது முதல் படமான ‘தி லெஜண்ட்’ சந்தித்த விமர்சனங்களையும் கேலிகளையும் ஒரு சவாலாக எடுத்து கொண்ட சரவணன் அண்ணாச்சி, இம்முறை கதையில் கூடுதல் கவனம் செலுத்தினார். முன்னணி இயக்குநர்களுடன் ஆலோசித்து, இறுதியில் ‘எதிர்நீச்சல்’, ‘கொடி’ புகழ் துரை செந்தில்குமாருடன் கைகோர்த்தார். ஒரு கமர்ஷியல் லீடராக சரவணனை திரையில் காட்டிய விதம், டீசர் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

பாயல் ராஜ்புட், ஆண்ட்ரியா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்தில், இரண்டாம் பாதியில் துரை செந்தில்குமார் வைத்த அதிரடி திருப்பங்கள் ரசிகர்களை இருக்கை நுனிக்கே கொண்டு வந்துள்ளது. லெஜண்ட் சரவணனின் ஆக்‌ஷன் அவதாரம் திரையரங்குகளை அதிர வைத்து வருகிறது.

தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. முதல் 3 நாளில் உலகளவில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஏப்ரல் மாதத்தில் வெளியான தமிழ் படங்களில், வசூலில் முதலிடத்தைப் பிடித்து ‘லீடர்’ சாதனை படைத்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதால், வரும் நாட்களில் வசூல் இன்னும் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், கிண்டல் செய்தவர்களுக்குத் தனது வெற்றியின் மூலம் பதில் சொல்லியிருக்கிறார் லெஜண்ட் சரவணன். லீடர் – உண்மையான பாக்ஸ் ஆபீஸ் சம்பவம்!