கோச்சடையான் பட விவகாரம் தொடர்பாக ஜாமீன் கையெழுத்து போட்ட வழக்கில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் பல ஆண்டுகள் பெங்களூரில் வழக்கு ஒன்றை சந்தித்து வருகிறார். அந்த வழக்கில் இதுவரை ஆஜராகாமல் வந்த நிலையில், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட தாகவும் அதன் காரணமாகவே பெங்களூர் நீதிமன்றத்திற்கு நேற்று லதா ரஜினிகாந்த் நேரில் வந்து ஆஜரானார் எனக் கூறப்பட்டது.
மேலும் நீதிமன்றத்திற்கு தனது காதிலிருந்து இறங்கி செல்லும் போது முக்காடு போட்டுக்கொண்டு லதா ரஜினிகாந்த் சென்றார் என சில ஊடகங்கள் மோசமாக எழுதிய நிலையில், அதை எல்லாம் பார்த்து மனம் வாடிப்போன லதா ரஜினிகாந்த் ஊடகங்களை சந்தித்து அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.
கோச்சடையான் வழக்கில் என்ன நடந்தது?
கோச்சடையான் படத்தை நடிகர் ரஜினிகாந்த் வைத்து அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார். ஆனால் அந்த படம் படு தோல்வியை சந்தித்தது. அந்த படத்தின் தயாரிப்பாளர் பைனான்சியர் ஒருவரிடம் 6 கோடி ரூபாய் பணம் வாங்கி இருந்தார். அதற்கு லதா ரஜினிகாந்த் ஜாமின் கையெழுத்து போட்டிருந்தார். ஆனால், அதன் பின்னர் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முரளி என்பவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. கூடவே லதா ரஜினிகாந்த் மீதும் வழக்கை தொடர்ந்து உள்ளனர்.
லதா ரஜினிகாந்த் அதிரடி விளக்கம்:
பின்னர் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு அந்த குறிப்பிட்ட தொகையையும் முரளி என்பவர் பைனான்சியரிடம் வழங்கிய நிலையில், தான் போடாத கையெழுத்தை போலியாக பயன்படுத்தி மேலும் பல கோடி ரூபாய்க்கு மோசடியாக டாக்குமெண்ட் எழுதி தொடுத்த வழக்கு தான் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் அதற்கும் தொடக்கம் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றும் தன் நேரில் ஆஜராக தேவையில்லை என உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டதாகவும் ஆனால், என்னையும் என் குடும்பத்தையும் பழிவாங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் பெங்களூரில் வழக்கு தொடர்ந்து இப்படி வன்மத்தை தீர்த்துக் கொள்கின்றனர் என பகிரங்கமாக இதுதான் பிரச்சனை என்பதை விளக்கியுள்ளார்.
முக்காடு போடவில்லை:
மேலும், துப்பட்டா போட்டு முகத்தை மூடிக் கொண்டு சென்றது வெயிலுக்காக தானே தவிர முக்காடு போட்டுக் கொண்டு செல்லவில்லை என மீடியாக்களில் வந்த செய்திக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இந்த விவகாரத்தில் தனக்கு முழு சப்போர்ட் செய்து வருகிறார் என்றும் நியாயத்துக்காக எத்தனை முறை நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்றாலும் நான் செல்லத் தயார். நான் ஒரு ரூபாய் கூட யாரிடமும் பணமாக வாங்காத நிலையில், தேவையில்லாமல் என்னை ஏன் இந்த வழக்கில் தொல்லைக் கொடுக்கின்றனர். நீதிமன்றத்தில் எனக்கு ஜாமீனும் கொடுக்கவில்லை, பிடிவாரண்டும் கொடுக்கவில்லை. சட்டப்படி சந்திக்க வேண்டும் என்கிற நெறிமுறைகளை பின்பற்றியே வந்தேன் என்றும் கூறியுள்ளார்.