106 நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முகென் ராவ் முதல் பரிசினைப் பெற்றார், கோப்பையுடன் பதக்கமும் அவருக்கு கிடைத்துள்ளது. 2 வது பரிசினை சாண்டியும், 3 வது பரிசினை லாஸ்லியாவும் பெற்றனர்.
இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லாஸ்லியா, பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ஓவியாபோல் சுற்றிக் கொண்டிருந்தார், இவருக்கு படு வேகத்தில் ஆர்மி உருவானது.
அதன்பின்னர் கவினின் காதல்வலையில் விழுந்த அவர், தன் இயல்பினை வெளிக்காட்டத் துவங்கினார், கவின் ஒரு கட்டத்தில் வெளியேற அவர் ஓட்டுகளையும் சேர்த்துப் பெற்று 3 வது இடத்திற்கு வந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின், போட்டியாளர்கள் மீட்டிங்க் போடுவது, ட்விட்டரில் போஸ்ட் போடுவது என சுற்றிவருகிறார்கள், ஆனால் லாஸ்லியா முதல் ட்வீட்டையே நேற்றுதான் போட்டுள்ளார்.
அதில் அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார், “உங்களுக்கு நன்றியினை வார்த்தைகளால் சொல்ல முடியாது. உங்கள் கேள்விகளுக்கு என்னால் தற்போது பதில் அளிக்கமுடியவில்லை, விரைவில் அளிப்பேன். நிச்சயம் உங்களைப் பெருமைப்படுத்துவேன்” என்று கூறியுள்ளார்.
ரசிகர்கள் பலரும் இதற்கு ரீ ட்வீட் போடுவதும் பகிர்வதுமாக வைரலாக்கி வருகின்றனர்.