பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது.
இதில், முகென் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு டிராபி மற்றும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பெரிய அளவில் பிரபலமாகிப் போனவர்கள் கவினும் லாஸ்லியாவும் தான். அவர்கள் காதல்தான் அவர்களை பைனல் வரை கொண்டு சென்றது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஒவ்வொருவரும், போட்டோக்களை போட்டுவர கவின்- லாஸ்லியா போட்டோ வெளிவரவில்லை என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர், இதில் குறிப்பாக கவின் லாஸ்லியா ஆர்மியினர் அதுகுறித்து கமெண்ட்டுகள் மூலம் கேட்டும் வந்தனர்.
தற்போது ரசிகர்களுக்காக லாஸ்லியா ஒரு ட்விட்டர் போட்டுள்ளார், அதாவது கமல் ஹாசன் கூறுவதுபோல் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று தொடங்கி, விஜய் தொலைக்காட்சி மற்றும் கமல்ஹாசன் நன்றி கூறியுள்ளார்.
அடுத்து தன்னுடைய கேம் சேஞ்சர் கவினுக்கு நன்றிகள் என்று தெரிவித்து உள்ளார். பிக் பாஸ் முடிஞ்சாலும் இவங்க கதை தொடரும்போல என பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.