நேற்று போட்டியாளர்கள் ஏர்டெல் 4 ஜி மூலம் வீடியோ காலிங்கில் குடும்ப உறுப்பினர்களுடன் பேசலாம் என்று பிக் பாஸ் கூறினார்.
அப்போது சாண்டி தனது மகள் சுசானாவிடன் பேசினார். அப்போது சாண்டியின் மனைவி முகத்தைக் காட்ட, குளோசப்ல வேண்டாம் பயமா இருக்கு என்று கிண்டலடித்தார்.
அடுத்து பேசிய ஷெரின், அம்மாவிடம் தன்னுடைய நாய்க்குட்டியை மிஸ் செய்வதாக கூறினார்.
அடுத்து லோஸ்லியா, தனது தந்தையிடம் வெளியில் வந்து நடந்த அனைத்தையும் சொல்கிறேன், கவலைப்பட வேண்டாம். பார்த்து பத்திரமாக போய்ட்டு வாங்கள் என்று கூறினார்.
அவர் தந்தை பிடிகொடுத்து பேசவில்லை என்பது அவர் பேசிய விதத்திலேயே தெரிந்தது. லாஸ்லியாவிற்கு அழுகையே வரவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
கவின் போனபோது கொட்டிய கண்ணீரை இப்போது காணவில்லையே என்று பலரும் கேட்டுள்ளனர். எப்படியோ அனுதாப ஓட்டுக்காக அழுவதுபோல் பாசாங்கு செய்துவிட்டார்.
அதேபோல் கவின் வேற என்ட்ரி கொடுத்திருக்கார், காதல் செய்து மீதி இருக்கும் ஓட்டையும் வாங்கிடுவார், இதுவரை கேப்டனே ஆகாம, ஜாலியா இருந்துட்டு அனுதாப ஓட்டு வாங்குறது லாஸ்லியாவுக்கு புதுசா என்ன? என நெட்டிசன்கள் விளாசுகின்றனர்.