சிக்ஸர் அடிக்கும் லப்பர் பந்து.. படத்துல கெத்து கதாபாத்திரம் உருவான விதம்

By John A

Published:

தமிழ் சினிமாவில் விளையாட்டு சார்ந்த படங்கள் தற்போது நிறைய வந்து கொண்டிருக்கிறது. இதற்கு அச்சாரம் போட்டுக் கொடுத்தது வெங்கட்பிரபு இயக்கிய முதல் படமான சென்னை28 படம் தான். உள்ளுரில் ஏரியாக்களுக்கிடையே நடக்கும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை கண்முன் நிறுத்தியிருப்பார் இயக்குநர் வெங்கட்பிரபு. இதனையடுத்து விளையாட்டினை அடிப்படையாக வைத்து பல திரைப்படங்கள் வந்து விட்டது. அதிலும் கிரிக்கெட்டை மையமாக வைத்து தோனி முதல் 1982 படம் வரை பல மொழிகளில் படங்கள் வந்து விட்டது.

அந்த வகையில் தமிழில் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் சிக்சஸ் அடித்து வரும் திரைப்படம் தான் லப்பர் பந்து. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவின் மேக்கிங் ஸ்டைலும், அட்டகத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாணின் நடிப்பும் படத்தினை வேறொரு தளத்தில் எடுத்துச் சென்றிருக்கிறது. பொதுவாக ஹிட் இயக்குநர்களின் முதல் ஹீரோவாக அட்டகத்தி தினேஷ்தான் இருப்பார். பா.ரஞ்சித், வெற்றிமாறன் என முன்னனி இயக்குநர்களிடம் சினிமா வித்தையைக் கற்றவர். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் இயல்பான நடிப்பைக் கொண்டுவருபவர்.

ரசிகர் மன்றங்கள் எதற்காக உருவாக்குகிறார்கள்…? அரவிந்த்சாமி கேள்வி…

சமீபத்தில் வெளியான J.பேபி படத்திலும் ஊர்வசியின் மகனான அற்புதமான மிடில்கிளாஸ் குடும்பத்து நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இப்படி அட்டகத்தி தினேஷை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றிருக்கிறது லப்பர் பந்து திரைப்படம்.

இந்தப் படத்திற்காக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து முதலில் ஹரீஸ் கல்யாணிடம் கதை சொல்லி ஓகே வாங்கியபின் கெத்து கதாபாத்திரத்தில் யாரையும் முடிவு செய்யாமல் இருந்திருக்கிறார். ஏற்கனவே இந்தக் கதாபாத்திரத்தின் பெயர் ஜப்பான் என்று பெயரிடப்பட்டிருந்ததாம். அப்போது ஜப்பான் படம் வெளியானதால் கேரக்டர் பெயரை கெத்து என மாற்றியிருக்கிறார்.

அதன்பின் இந்தக் கதபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்த போது அவர் சம்மதிப்பாரா என்ற கேள்வி இயக்குநருக்கும், ஹரிஷ் கல்யாணுக்கும் எழுந்துள்ளது. ஏனெனில் கெத்து கதாபாத்திரம் ஹீரோயின் அப்பா மற்றும் வயதான கதாபாத்திரம் ஆகும். ஆனால் தினேஷிடம் கதையைச் சொல்லும் முன் இதனை முதலில் இயக்குநர் சொல்ல தினேஷ் ஓகே சொன்ன பின்தான் முழுக்கதையையும் சொல்லி முடித்திருக்கிறார்.

இப்படித்தான் அட்டகத்தி தினேஷ் லப்பர் பந்து படத்தில் கெத்தாக மிரட்டினார். படம் குறித்து பாசிடிவ் விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது. இதனால் லப்பர் பந்து வசூலில் சிக்ஸர் மழை பொழிந்து கொண்டிருக்கிறது.