அப்பாடா ஒரு வழியாக வெளியானது குட்டி ஆல்யாவின் புகைப்படம்!!

நடிகை ஆல்யா மானசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். ராஜா ராணி சீரியலில் இவர்கள் நடித்த கார்த்தி- செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். சீரியலில்…

நடிகை ஆல்யா மானசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்.

ராஜா ராணி சீரியலில் இவர்கள் நடித்த கார்த்தி- செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

26cfc2579bc6132c3dd7a6d6c398b6c7-2

சீரியலில் இவர்களுக்கு இருந்த கெமிஸ்ட்ரி ரியல் லைஃப்லயும் வொர்க் அவுட் ஆக, சீரியலில் நடிக்கும் போதே இவர்கள் இருவரும் காதலிக்கத் துவங்கினர். இதுகுறித்து அவ்வப்போது பேட்டிகளைக் கொடுத்துவந்த இந்த ஜோடி விஜய் தொலைக்காட்சியின் பிரமாண்ட விருதுவிழா ஒன்றில் தங்கள் காதலை வெளிப்படுத்தினர்.

சீரியல் முடியும் முன் சிம்பிளாக ரகசியத் திருமணம் செய்து கொண்ட இவர்கள் சஞ்சீவ் வீட்டார் சம்மதத்துடன் ரிஷப்ஷனை முடித்த நிலையில், ஆல்யா கர்ப்பமாகினார்.

கர்ப்பமான பின்னரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் சமீபத்தில் இவர்களுக்கு ஐலா என்ற மகள் பிறந்தாள். இதுவரை ஐலாவின் போட்டோவினை சமூக வலைதளத்தில் வெளியிடாத, இந்த ஜோடி ஆல்யாவின் பிறந்தநாளும், ஆல்யா- சஞ்சீவின் முதல் திருமண நாளான நேற்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது.

குட்டி ஆல்யாவின் புகைப்படத்தினைப் பார்த்த ரசிகர்கள், “ஆல்யாவையே உரிச்சு வெச்சு இருக்கீங்களேடா குட்டிம்மா” என்று கொஞ்சி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன