சமீபத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டும் நிபந்தனையுடன் தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் அந்த நிபந்தனைகளில் ஒன்று படப்பிடிப்பில் 20 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்பது
சின்னத்துரை தொடர்களை 20 நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி நடத்துவது என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்
இது சாத்தியமில்லாத ஒன்று என்றும் தொடரின் இயக்குநர் ஒளிப்பதிவாளர் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் மட்டுமே 30 பேர் இருப்பார்கள் என்றும் அதைத் தவிர்த்து நடிக நடிகையர் வேறு இருக்கிறார்கள் என்றும் எனவே 20 பேர்கள் மட்டுமே வைத்துக்கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்
மேலும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது ஒன்றரை எபிசோடுகளை மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் அப்போது தான் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும் என்றும் தமிழக அரசின் இந்த நிபந்தனைகள் இவை சாத்தியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்
இது குறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியுடன் ஆலோசனை செய்துள்ளதாகவும் 35 பேர்கள் வரை படப்பிடிப்பில் கலந்துகொள்ள அனுமதி அளிக்க கோரிக்கை வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்