எதிர்பார்ப்புடன் வெளிவந்த சீனு ராமசாமியின் கோழிப்பண்ணை செல்லத்துரை..எப்படி இருக்கு? விமர்சனம்

By John A

Published:

Kozhipannai Chelladurai: தமிழ் சினிமாவில் யதார்த்த கதைக் களங்களை இயக்கும் வெகுசில இயக்குநர்களில் சீனு ராமசாமியும் ஒருவர். கூடல் நகர் திரைப்படத்தில் ஆரம்பித்த இயக்குநர் பயணம் கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மாமனிதன் படம் வரை சீனு ராமசாமியின் படங்கள் தனித்துக் காட்டின. குறிப்பாக தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை,கண்ணே கலைமானே, நீர்ப்பறவை போன்ற படங்கள் பெரும் வரவேற்பினைப் பெற்றன. இந்நிலையில் தற்போது சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளிவந்துள்ள அடுத்த திரைப்படம் தான் கோழிப்பண்ணை செல்லத்துரை.

இன்று திரையரங்குளில் வெளியாகி இருக்கும் இத்திரைப்படத்தில் ஏகன், சத்யா தேவி, பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கியக் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் மற்றும் மேத்யூ அருள் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.

நாயகன் ஏகன் ஆண்டிபட்டியில் கோழிப்பண்ணை வைத்திருக்கும் பெரியசாமி யோகிபாபுவின் பண்ணையில் சிறுவயது முதலே வேலை செய்கிறார். இவருக்கு ஓர் தங்கை. இவர்களது அம்மா சின்ன வயதில் தவறான முறை கொண்டு சென்றதால் தந்தையும் பிரிந்து விடுகிறார். சத்யாதேவிக்கு கல்லூரியில் படிக்கும் சக மாணவருடன் காதல் ஏற்பட தன் தாய்போன்று ஓடி விடுவாளோ என்று எண்ணி அவருக்குக் கட்டுப்பாடுகள் போடுகிறார். சத்யாதேவியின் காதல் ஜெயித்ததா, ஏகன் செல்லத்துரை ஏற்றுக் கொண்டாரா என்பதுதான் மீதிக் கதை.

கே.பாலச்சந்தர் பற்றி அவதூறு பேச்சு.. பாடகி சுசித்ராவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்..

வழக்கமாக சீனு ராமசாமியின் படங்களில் தெரியும் எமோஷனல் இதில் மிஸ்ஸிங். மேலும் நடிகர்கள் அனைவரும் தங்களது பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். எனினும் சில காட்சிகளில் கிரிஞ்ச் டைப் ஆக இருப்பதால் ரசிகர்களுக்கு சிரிப்புதான் வருகிறது. யோகிபாபு வழக்கமாக தன்னுடைய குணச்சித்தரம் கலந்த காமெடியை கச்சிதமாகச் செய்திருக்கிறார். படத்தில் நிறைய இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங். பிரிகிடா ஏகனுடன் காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார்.

கிராமத்துப் படங்கள் என்றால் ஒளிப்பதிவு எப்படி இருக்க வேண்டும். ஆனால் இதில் ஒளிப்பதிவாளர் சற்று தடுமாறியிருக்கிறார். மேலும் படத்திற்கு திரைக்கதை பலவீனம்.நிறைய காட்சிகள் ரசிகர்களுடன் ஒட்டவில்லை. சீனு ராமசாமியிடம் இப்படி ஓர் படைப்பு வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மொத்தத்தில் கோழிப்பண்ணையிலிருந்து கோழிகள் கொத்தி வெளியே விரட்டுவது போல ரசிகர்களை கொத்தியிருக்கிறார் சீனு ராமசாமி.