கொரோனா தொற்றினால் உலகம் மிகப்பெரும் அவல நிலையை சந்தித்து வருகிறது. பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸில் இருந்து பிரிட்டன் பிரதமர், ஹாலிவுட் நடிகர்கள் என யாரையும் இந்த கொடிய வைரஸ் விட்டு வைக்கவில்லை.
இந்நிலையில் 1986ல் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படமான ஏலியன்ஸ் திரைப்படத்தில் ரஸ் ஜோர்டான் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜே பெனடிக்ட்.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்த இவர், சிறுவயதிலேயே நாடகங்கள் உள்ளிட்டவற்றில் நடித்தவர்.
அடுத்த வாரம் தனது பிறந்த நாளை இவர் கொண்டாட இருந்த வேளையில் கொரோனா நோயால் உயிரிழந்தார் இவர்.