கொரோனா தொற்று ஏற்படுத்திய பிரச்சினையால் பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதில் பல சினிமா பிரபலங்கள் தங்களது ரசிகர்கள், ரசிகைகள் உடன் சமூக வலைதளங்களில் லைவில் பேசி வருகின்றனர்.
பல நடிகர், நடிகைகள் பொழுதை போக்க முடியாமல் தவித்து கொண்டிருக்க நடிகர் சூரி தினமும் தன் குழந்தைகளுடனான சேட்டைகள் செய்து ஏதாவது வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அவர் குழந்தைகளுடன் சேட்டை செய்யும் வீடியோக்கள் பிரபலமாகி வருகிறது. சில நேரங்களில் நல்ல பயனுள்ள அறிவுரைகளையும் குழந்தைகளுக்கு சொல்லுகிறார் இவர்.