சுந்தரபாண்டியன் படத்துக்கு பிறகு அதே சசிகுமாருடன் எஸ்.ஆர் பிரபாகர் இணையும் படம் என்பதால் இப்படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.அந்த எதிர்பார்ப்பை படம் தீர்த்து வைத்துள்ளதா என்று பார்ப்போம்.
கரூர் மாவட்டத்தில் பெரிய மனிதராக ஊர் போற்றும் நபராக வாழ்ந்து வருகிறார் இயக்குனர் மகேந்திரன்.
இவரின் ஒரே மகன் சசிக்குமார் இவரும் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி சமத்துவம் சகோதரத்துவம் என ஊரை மாற்ற நினைக்கிறார்.
இதனால் ஊருக்குள் பல பேர் சசிக்குமாருக்கு பகையாகின்றனர். அந்த நேரத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில் பெரும் கலவரம் வெடித்து ஒரு கொலையும் நடக்கிறது.
இதில் சூரி , சசிக்குமார் உள்ளிட்டோர் கைதாகிறார்கள். சுந்தரபாண்டியன் படம் போலவே நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்சினை பெரிய அளவில் வருவது போல அந்த படத்தின் கருத்தையும் இப்படத்தில் லேசாக சேர்த்துள்ளார் இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகர்.
சமூக கருத்தை படம் முழுக்க கொண்டு வர வேண்டும் என இயக்குனர் விரும்பி இருக்கிறார். ஆனால் படம் பெட்டிக்குள் சில வருடங்கள் முடங்கியதாலும் லேசாக சுந்தரபாண்டியன் சாயல் இருப்பதாலும் கதையில் திரைக்கதையில் போதிய அளவு ஈர்ப்பு இல்லாததாலும் படம் சுமார் ரகமே.
காலஞ்சென்ற இயக்குனர் மகேந்திரன் இப்படத்தில் ஊர் பெரிய மனிதராக நன்றாக நடித்திருக்கிறார்.
சூரியின் காமெடியில் வறட்சி நிலவுகிறது. மொத்தத்தில் கொம்பு வச்ச சிங்கம்டா ஒரு முறை பார்க்கலாம்.