கோலங்கள் சீரியலை 90-களில் பிறந்தவர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. நடிகை தேவயானி உச்சத்தில் இருந்த போதே கோலங்கள் சீரியல் வாய்ப்பினை ஏற்று சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் அவரை ஒவ்வொரு இல்லங்களிலும் கொண்டு சேர்த்தது. கோலங்கள் அபி-க்கு இந்தக் கதாபாத்திரம் எப்படி வெற்றியைக் கொடுத்ததோ அதேபோல் இந்த சீரியலில் மற்றொரு குறிப்பிடத்தகுந்த நடிகர் தான் ஆதி.
கோலங்கள் சீரியல் முழுக்க தேவயானியின் மிரட்டும் தம்பியாக வந்து ரசிகர்கள் அனைவரையும் மிரள வைத்தார் ஆதி. அஜய் கபூர் என்கிற ஆதிக்கு இந்தக் கதாபாத்திரம் பெரிய திருப்பத்தைக் கொடுத்தது. சின்னத்திரையில் வில்லனாக மிரட்டியவருக்கு வந்த ஒரு சூப்பர் ஹிட் திரைப்பட வாய்ப்புதான் அயன் திரைப்படம்.
உழைச்சு சாப்பிடுறதே மேல்.. மகனால் வந்த தலைவலி.. 55 வயசுல ஆட்டோ ஓட்டும் தாய்.. இன்ஸபிரேஷனல் ஸ்டோரி..
கே.வி. ஆனந்த் இயக்கத்தில், ஏ.வி.எம்., சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த 2009-ல் வெளிவந்த அயன் திரைப்படம் சூர்யாவுக்கு சிறந்த என்டர்டெயினர் ஹீரோ அந்தஸ்தைக் கொடுத்தது. இந்தப் படத்தில் வில்லான நடித்து மிரட்டியவர் அகஸ்தீப் சைக்கேல். முதலில் இந்தக் கதாபாத்திரத்திற்கு இயக்குநர் கே.வி. ஆனந்த் தேர்வு செய்தது அஜய் கபூரைத் தான். ஆனால் அந்த நேரத்தில் கோலங்கள் சீரியலில் அவர் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் அவரால் அயன் பட வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனது. இதனையடுத்தே இந்த வாய்ப்பு அகஸ்தீப்-க்குப் போயிருக்கிறது.
எனினும் இயக்குநர் கே.வி. ஆனந்த் அஜய் கபூரை விட்டுவிட மனமின்றி வில்லனுக்கு டப்பிங் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அதனை அஜய் கபூர் மகிழ்வுடன் ஏற்று அயன் படத்தில் வில்லனுக்கு டப்பிங் கொடுத்தார். மேலும் டப்பிங் பணிகளை ஒரே நாளில் முடித்து கே.வி.ஆனந்திடம் பாராட்டையும் பெற்றிருக்கிறார் அஜய் கபூர். இந்தப் படத்தில் அவர் நடித்திருந்தால் தமிழ் சினிமாவில் நிச்சயம் ஓர் அடுத்த ரகுவரனாக அஜய் கபூர் வலம் வந்திருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை.
அஜய் கபூரின் மனைவி நிஷா கபூரும் ஒரு சீரியல் நடிகையே. பல வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான ருத்ரவீணை சீரியலில் நடித்தார். தற்போது மல்லி சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.