சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி… காதலை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…

By Meena

Published:

கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவில் நடிக்கும் பிரபலமான நடிகை ஆவார். தமிழ் மலையாளம் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவரது தாயார் மேனகா தமிழ் சினிமாவில் நடித்த நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

2000களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ் 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் விக்ரம் பிரபு உடன் இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அடுத்ததாக 2016 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் கீர்த்தி சுரேஷ்.

தொடர்ந்து தொடரி ரெமோ பைரவா தானா சேர்ந்த கூட்டம் சாமி 2 சர்க்கார் சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் புகழ்பெற்றார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்ற தகவல் பரவி வந்தது.

அது உண்மை தான் என்று கூறும் வகையில் கீர்த்தி சுரேஷ் ன்று அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு ருக்கிறார். அதாவது தனது 15 வருட கால நண்பரை காதலிப்பதாக பதிவிட்டு இருக்கிறார். வலைதள பேச்சுக்களின்படி கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட ஆண் நண்பரான ஆண்டனி என்பவருடன் வருகிற டிசம்பர் 11ஆம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.