90 களில் கொடி கட்டிப் பறந்த நடிகர் பிரபல நடிகர் அருண் பாண்டியன், இவர் தமிழ் மொழியில் விகடன் போன்ற பல்வேறு திரைபப்டங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது ஐங்கரன் பட நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அருண் பாண்டியனின் மகளும் ரம்யா பாண்டியனின் சித்தப்பா மகளான கீர்த்தி பாண்டியன். 2019 ஆம் ஆண்டு வெளியான தும்பா படம் மூலம் சினிமாவில் கால் பதித்தார், கலை வாரிசு என்பதால் இவருக்கு முதல் படத்திலேயே பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
முதல் படத்தில் கிடைத்த வெற்றியால் தற்போது மற்றுமொரு தமிழ்ப் படத்தில் நடிக்கும் வாய்ப்பினையும் கீர்த்தி பெற்றார். மலையாளத்தில் மாஸ் ஹிட்டான ஹெலன் படத்தின் ரீமேக்கில் தந்தை அருண் பாண்டியனுடன் இணைந்து நடிக்கிறார்.
ஊரடங்கு காலத்தில் நடிகர், நடிகைகள் ஏதாவது ஒரு விதத்தில் பொழுது போக்கி, அதனை வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்தவகையில் தற்போது நடிகை கீர்த்தி பாண்டியன் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கீர்த்தி பாண்டியன் கூறியுள்ளதாவது, “ஊரடங்கு காலத்தில் நிலத்தினை உழும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். இது எங்களுடைய சொந்த இடம் என்று யாரும் நினைக்க வேண்டாம். பொது இடத்தினை உழுது சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.