தமிழ் வழியில் கல்வி பயில்பவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் கூறப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக தமிழ் ஆர்வலர்கள் இதை வலியுறுத்தி வந்த நிலையில் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
இதற்காக கவிஞர் தாமரை தனது பாராட்டுதலை முதல்வருக்கு தெரிவித்துள்ளார். இதற்கு பலத்த பாராட்டை தெரிவித்த பாடலாசிரியர் தாமரை, இது விழா எடுத்துக் கொண்டாட வேண்டிய நிகழ்வு என்று தெரிவித்தார்.
இது போலவே வங்கி வேலைகள், தொடர்வண்டி சேவை, விமான நிலையம் உள்ளிட்ட அனைத்திலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், உங்களால் முடியும் முதல்வரே! அடித்து ஆடுங்கள் என்று முதல்வர் எடப்பாடியை பாராட்டியுள்ளார்.