நாம வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு போகணும்னா இதை செய்யணும்… கவின் ஓபன் டாக்…

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற நடிகர்களுள் ஒருவர்தான் கவின். விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்ததன் மூலம் தனது சினிமா கேரியரை ஆரம்பித்தார் கவின். கனா காணும் காலங்கள்…

kavin

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற நடிகர்களுள் ஒருவர்தான் கவின். விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்ததன் மூலம் தனது சினிமா கேரிரை ஆரம்பித்தார் கவின். கனா காணும் காலங்கள் தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களை பெற்றதால் அடுத்தடுத்து விஜய் டிவியின் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதற்கு அடுத்ததாக சரவணன் மீனாட்சி என்ற பிரபல தொடரில் நடித்து பிரபலம் ஆனார் கவின். அந்த நேரத்திலேயே சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தார். பின்னர் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் மூன்றில் தோன்றியதன் மூலம் புகழடைந்தார் வின். அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்தப்படம் நல்ல விமர்சனங்களை அவருக்கு பெற்று தந்தது.

பின்னர் 2023 ஆம் ஆண்டு டாடா திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் அவருக்கு சினிமாவில் திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தனது நடிப்பு திறனை நன்றாக வெளிப்படுத்தியிருந்தார் கவின். பின்னர் ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது தீபாவளியை முன்னிட்டு கவின் நடித்த Bloody Begger திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

தைக்கம் எப்படி இருந்தாலும் இந்த Bloody Begger திரைப்படத்தில் கவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. டார்க் காமெடி என்ற தீமை இவரது நடிப்பு மிகவும் அபாரமாக இருந்தது என்று மக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நேர்காணலில் கலந்து கொண்ட கவின் வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்பதை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.

கவின் கூறியது என்னவென்றால் நாம் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்ல வேண்டும் என்றால் நம் கையில் இருக்கும் வேலையை சிறப்பாக அர்பணிப்போடு செய்தால் அது நமக்கு புதுப்புது வாய்ப்புகளை பெற்று தரும். அப்படித்தான் நான் எப்போதுமே பண்ணிட்டு இருக்கேன். எனக்கு கிடைச்ச வாய்ப்ப சரியா பயன்படுத்தணும்னு நான் நினைப்பேன் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார்.