கவினுக்கு இருக்குற தைரியம் கூட சூர்யாவுக்கு இல்லையா.. இணையத்தில் விமர்சிக்கும் ரசிகர்கள்..

By Ajith V

Published:

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பெரிய தமிழ் படங்கள் அதிலும் இல்லாத சூழ்நிலையில் தற்போது ஒவ்வொரு திரைப்படங்களும் போட்டி போட்டு ரிலீஸ் தேதியை அறிவித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்னும் இரண்டு தினங்களில் கோட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ள சூழலில் இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன், சூர்யா நடிப்பில் கங்குவா, அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி, சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன், ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் என பெரிய படங்கள் அடுத்தடுத்து அணிவகுத்து நிற்கிறது.

இதில் இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் தினத்தை அறிவித்திருந்தது பெரிய அளவில் விமர்சனத்தை உருவாக்கியிருந்தது. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம், அக்டோபர் மாதம் வெளியாகும் என கடந்த பல தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது. கங்குவா படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவா இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள சூழலில் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதே தினத்தில் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் தற்போது கங்குவா திரைப்படம் வேறொரு நாளில் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிகிறது. இது பற்றி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகள் பேசி இருந்த நடிகர் சூர்யா, 50 ஆண்டுகளாக ரஜினி சினிமாவில் இருப்பதால் அவருக்கு மதிப்பு கொடுத்து தனது திரைப்படத்தை பின் ஒரு நாளில் ரிலீஸ் செய்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

கங்குவா திரைப்படம் தனியாக வந்தால் தான் அதன் பிரம்மாண்ட செலவுக்கு ஏற்ற வசூலை அள்ள முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது. ஆனால் அதே வேளையில் சூர்யாவின் திரைப்படங்கள் ஓடிடியில் வெற்றி கண்டு வரும் நிலையில் திரையரங்கில் கொண்டாடி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

இதனால் அக்டோபர் பத்தாம் தேதி ரஜினி படத்துடன் மோதும் என சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் தற்போது சீனியர் நடிகர் எனக்கூறி சூர்யா கங்குவா ரிலீஸ் செய்தியை மாற்றி வைத்தது அவரது ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது. அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் சொன்ன தேதியில் எந்த ஹீரோ படம் வந்தாலும் ரிலீஸ் செய்வதாகவும் சூர்யா மட்டும் ஏன் பின் வாங்கினார் என்றும் விமர்சனமும் செய்து வருகின்றனர்.

அப்படி ஒரு சூழலில் தான் தீபாவளி ஸ்பெஷலாக கவின் நடிப்பில் உருவாகியுள்ள பிளடி பக்கர் (Bloody Beggar) என்ற திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தீபாவளி தினத்தில் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படமும் வெளியாகும் என ஏற்கனவே அதன் படக்குழு அறிவித்திருந்தது.

சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்து வந்தது போல கவினும் விஜய் டிவியில் பிரபலமாகி தான் தற்போது திரைப்படங்களில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். ஆனால் அவர் சிவகார்த்திகேயனின் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளான அமரன் திரைப்படத்துடன் தனது திரைப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ள நிலையில் இது பற்றி பேசி வரும் ரசிகர்கள், சூர்யா ஏன் ரஜினியின் பெயரை சொல்லி பின்வாங்க வேண்டும் என்றும் கவினுக்கு இருக்கும் தைரியம் கூட இல்லையா என்றும் வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர்.