கவிஞர்கள் பெரும்பாலும் தங்களுடைய பாடல்களில் இரண்டு பொருள் தரும்படி நிறைய பாடல்களை எழுதுவார்கள். அதில் ஹீரோவுக்கு போட்டியாக விளங்கக் கூடிய மற்றொரு ஹீரோவை பஞ்ச் வசனங்கள் பாடல்களில் தாக்கும் விதமாக வரிகள் என எழுதித் தள்ளினர். இதனால் ஒரு கவிதைப் போரே தமிழ் சினிமாவில் நிறைய நடந்துள்ளது. இதில் கவிஞர் வாலி சற்று அதிக குசும்புக் காரர். யாராக இருந்தாலும் தனது பேனா முனையாலே பதில் சொல்லி விடுவார். கவிஞர் கண்ணதாசனும் இவருக்கே குருவாக விளங்கியவர்.
இப்படி கவிஞர்கள் எழுதிய பல பாடல்களில் ஒரு குறிப்பிட்ட பாடல் உலக நாயகனின் கமல்ஹாசனின் புகழையும், வாலியின் திறமையையும் எடுத்துணர்த்திய பாடல். அது தசாவதாரம் திரைப்படத்தில் இடம்பெற்ற கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது பாடல். தசாவதாரம் படத்தின் வெற்றியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தமிழ்சினிமாவினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய திரைப்படம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படத்திற்கு இசையமைத்தவர் பாலிவுட் இசையமைப்பாளர் ஹிமேஷ் ரோஷ்மியா.
மருத்துவமனையில் இருந்து ஷாலினி அஜித் வெளியிட்ட புகைப்படம்.. அப்ப அறுவை சிகிச்சை உண்மைதானா?
இப்படத்தில் ரங்கராஜ நம்பியாக கமலின் முதல் அவதாரப் பாடலான கல்லை மட்டும் கண்டால் பாடலை வாலி எழுதும் போது சில சுவாரஸ்ய தகவல்களையும் பாட்டில் சேர்த்துள்ளார். அது என்னவெனில் பாடலில் வரும் வரிகளான3
ராஜலட்சுமி நாயகன், ஸ்ரீனிவாசன் தான்
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்..
என்ற வரிகள் கமல்ஹாசனின் தாய் தந்தையைக் குறிப்பதாகும். கமல்ஹாசனின் தாய் பெயர் ராஜலட்சுமி, தந்தை பெயர் ஸ்ரீனி வாசன், ஸ்ரீனிவாசனின் சேய் (குழந்தை), விஷ்ணுதாசன் (கமல்ஹாசன்) என்று கடவுளைப் போற்றுவது போலவும், தன் தாய் தந்தையை கமல் நினைவு கூறுவதுபோலவும் பாடலை அழகாக எழுதியிருப்பார் வாலி.
மேலும் அடுத்த வரிகளான
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான்
ராஜனுக்கு ராஜன்
இந்த ரங்கராஜன் தான்..
என்று எழுதியிருப்பார். இதில் ராஜா என்று யாரைக் குறிபிடுக்கிறார் என்று சொல்லித் தெரியவேண்டியது இல்லை. மேலும் ரங்கராஜன என்பது வாலியின் இயற்பெயரைக் குறிக்கிறது. இப்படி தமிழால் வார்த்தை ஜாலம் காட்டி பாட்டிற்கு அழகு சேர்த்திருப்பார் வாலி. இப்பாடலைப் பாடியவர் ஹரிஹரன் மற்றும் குழுவினர்.