அஜீத் ரசிகர்கள் சிலர் எல்லை மீறி போய் கஸ்தூரியிடம் சென்று வம்பு வளர்க்கின்றனர். சிலர் மிகவும் மோசமாகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளாலும் கஸ்தூரியிடம் போய் வம்பு இழுக்கின்றனர். எழுதவும் பேசவும் தயங்கும் வார்த்தைகளால் அஜீத் ரசிகர்கள் சிலர் செய்யும் வம்பு மிகவும் மோசமாக உள்ளது.
உண்மையில் அஜீத்தின் உண்மையான ஒழுக்கமான ரசிகர்கள் பலரையும், இது போல சேட்டைகள் செய்யும் நபர்களால் சேர்ந்து பாதிக்கப்படுகிறார்கள்.
இதில் இலங்கையை சார்ந்த ரசிகர்களும் உள்ளனர். அஜீத் சமுதாயத்திலும் சினிமாவிலும் மிகப்பெரும் நிலையில் உள்ள நடிகர். சினிமா விரும்பிகளும் ரசிகர்களும் அதிக அளவு இவர் மீது மரியாதை வைத்துள்ளனர். ஆனால் அஜீத் ரசிகர்கள் என சொல்லிக்கொள்ளும் சிலர் மிக ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துவது அருவருக்கத்தக்கதாய் உள்ளது. இது மிகவும் தவறான போக்கு. தன் பெயர் அரசியல் ரீதியாக பயன்படுத்தப்படுகிறது, சமூக வலைதளங்கள் ரீதியாக பயன்படுத்தப்படுகிறது என்ற உடன் உடனே அப்படி எல்லாம் இல்லை என மறுப்பு அறிக்கை வெளியிடும் அஜீத் , இது போல பெண்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசும் அதுவும் தன் பெயரை அடைமொழியாக வைத்துக்கொண்டு பேசும் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பலரது எண்ணம்.
பலரது வசதிக்காகவும் நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்காகவும் பயன்படுத்தும் சமூக வலைதளங்களை தவறான முறையில் பயன்படுத்துவதும் தவறு அதை கண்டு கொள்ளாமல் இருப்பதும் தவறு.