அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் ரிலீசில் சில பிரச்சினைகள் இருப்பதால் இன்றுவரை விடாமுயற்சி பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.
அதனை தொடர்ந்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸ் என ஆரம்பத்திலேயே அறிவித்திருந்தார்கள். ஆனால் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸிலும் சிக்கல் இருப்பதாக கூறப்பட்டது.
அதாவது குட் பேட் அக்லி திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் வியாபாரம் சரியாக போகவில்லை. அந்த படத்தை வாங்க யாரும் முன் வரவில்லை என்ற காரணத்தினால் பொங்கல் அன்று குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகாது என இப்போதைக்கு தகவல் கூறப்பட்டிருக்கிறது.
அதனால் அந்த தேதியை விடாமுயற்சி திரைப்படம் ஆக்கிரமித்துக் கொள்ளும் என தகவல் வெளியானது. எது எப்படியோ கூடிய சீக்கிரம் அஜித்தின் ஏதாவது ஒரு படம் பொங்கல் அன்று வெளியாவதற்கு வாய்ப்பு இருக்கும் என்றும் கோடம்பாக்கத்தில் கூறப்படுகிறது. இதற்கிடையில் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர்.
அந்தப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் அந்தப் படத்தின் தேதியையும் மாற்றி இருக்கிறார்கள். ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் ரிலீஸ் ஆக கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாக போகிறது. அதனால் அஜித்தின் படத்திற்கு இது ஒரு வகையில் சிக்கலாகவே அமையும் என தெரிகிறது.
ஏனெனில் ராம் சரணை பொறுத்தவரைக்கும் தெலுங்கில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள், அதுபோக வெளிநாட்டிலும் தெலுங்கு படத்திற்கு என ஒரு தனி வரவேற்பே இருக்கிறது. அதனால் அஜித்தின் எந்த படம் வெளியானாலும் வசூலில் கொஞ்சம் தொய்வு ஏற்படத்தான் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் பொங்கல் ரேஸில் மற்றும் ஒரு திரைப்படம் இறங்கி இருக்கிறது. அது கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் வா வாத்தியாரே திரைப்படம். மெய்யழகன் திரைப்படத்திற்கு பிறகு வா வாத்தியாரே திரைப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் எல்லாம் தடபுடலாக நடந்து கொண்டிருக்கின்றன. அந்தப் படமும் பொங்கலுக்கு ரிலீசாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே இந்த பொங்கல் ரசிகர்களுக்கு ஒரு மாஸான பொங்கலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.