SJ சூர்யா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் திரைக்கதை ஆசிரியர் மற்றும் பிரபலமான நடிகராவார். 1999 ஆம் ஆண்டு அஜித்குமாரை வைத்து வாலி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் SJ சூர்யா.
பின்னர் குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 2010 காலகட்டத்திற்கு பிறகு நடிகராக தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார் SJ சூர்யா. நடிகராக இவருக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார் SJ சூர்யா.
வில்லன் நடிகராக ஸ்பைடர், டான், மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லை, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா, இந்தியன் 2 ராயன் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார் SJ சூர்யா. தற்போது தென்னிந்தியாவில் மிகவும் பிசியான ஒரு நடிகராக வலம் வருகிறார் SJ சூர்யா.
தற்போது விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் திரைப்படத்தில் SJ சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக கார்த்தியின் சர்தார் 2 படத்தில் நடித்துள்ளார் SJ சூர்யா. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் கார்த்தி SJ சூர்யாவை பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் SJ சூர்யா சார் சர்தார் 2 பட சூட்டிங்கில் அடுத்தடுத்த காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்று கேட்டு கேட்டு நடிப்பார். அவரது நடிப்பிற்கு எவ்வளவு தீனி போட்டாலும் பத்தாது. அவரை பார்க்கும் போது நான் பிரம்மித்து விடுவேன். அவரிடம் இருந்து கற்று கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது என்று பேசி இருக்கிறார் கார்த்தி.