‘கார்த்தி-26’ படப்பிடிப்பு தொடக்கம்… இயக்குனர் யார் தெரியுமா…?

By Meena

Published:

மூத்த நடிகர் சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி. இவர் 2004 ஆம் ஆண்டு ‘பருத்தி வீரன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின்பு ‘மெட்ராஸ்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘சிறுத்தை’, ‘கடைக்குட்டி சிங்கம்’ போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் முன்னணி நடிகர்களுள் ஒருவரரானார்.

இவரது சிறந்த நடிப்பினால் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், எடிசன் விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் ஆகியவற்றை பெற்றுள்ளார். மேலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான வரலாற்று காவியம் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ‘வந்தியத்தேவன்’ என்னும் கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்து மக்களின் பாராட்டைப் பெற்றார்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி 2022 ஆம் ஆண்டு நடித்த ‘விருமன்’, ‘சர்தார்’, ‘பொன்னியின் செல்வன்’ நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அடுத்ததாக 2023 ஆம் ஆண்டு அவர் நடித்த ‘ஜப்பான்’ திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை. வணீக ரீதியாக சற்று பின்தங்கியது என்று சொல்லலாம்.

அடுத்ததாக ஸ்டுடியோ க்ரீன், கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கும், ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமி நடிகர் கார்த்தியின் 26 வது படத்தை இயக்குகிறார். நலன் குமாரசாமி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எடுத்த குறும்படங்களின் மூலம் மக்களின் கவனத்தைப் பெற்று தமிழ் சினிமாவிற்குள் வந்தவர்.

‘கார்த்தி – 26’ படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் தொடக்க விழா படக்குழுவினருடன் நடந்து முடிந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. விரைவில் இப்படத்தின் பெயரையும் மற்றும் புதிய அப்டேட்களையும் அதிகார பூர்வமாக அறிவிப்போம் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.