கவிஞர் கண்ணதாசன் மானிடப் பிறவியின் இன்ப, துன்பங்கள் ஆசைகள் என எதையும் விட்டு வைக்கவில்லை. எனவே இவை அனைத்திலும் தான் பெற்ற அனுபவங்களைக் கொண்டே பல பாடல்களை இயற்றியிருக்கிறார். மேலும் அவருக்கு மதுப் பழக்கமும் இருந்தது. பெரும்பாலான நேரங்களில் கையில் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டே பாடல் வரிகளை யோசித்து அந்த சிகரெட் முடிவதற்குள் பாட்டை உருவாக்கி விடுவார்.
பெரும்பாலும் கண்ணதாசன் பாடல்களைக் கவனித்தோம் என்றால் கண்ணன் மேல் அன்பு கொண்டு பல பாடல்களை இயற்றியிருப்பார். காதல், கோபம் என பல உணர்ச்சிகளில் அவருக்கு நினைவில் முதல் ஆளாக வந்து நிற்பது கண்ணபிரான் தான். அந்த வகையில் 1963-ல் எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயக்குமாரி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த நானும் ஒரு பெண்தான் படத்தில் இடம் பெற்ற புகழ்பெற்ற பாடல்தான் கண்ணா கருமை நிறக் கண்ணா..
ஒரு பக்கம் விராட், இன்னொரு பக்கம் மேக்ஸ்வெல்.. ஒரே மேட்சில் 2 சாதனைகளை தூளாக்கிய சூர்யகுமார்..
இந்தப் பாடலுக்கான மெட்டை எம்.எஸ்.வி மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் கண்ணதாசனிடம் போட்டுக் காட்டியிருக்கின்றனர். அப்போது கண்ணதாசனுக்கு வரிகள் எதுவும் பிடிபடவில்லை. இந்நிலையில் வழக்கம் போல் சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு புகைத்தபடி யோசித்துக் கொண்டே பாத்ரூம் பக்கம் சென்றிருக்கிறார். இயற்கை உபாதைகள் முடித்து வந்தவரின் கையில் சிகரெட் அட்டையில் ஏதோ ஒன்று எழுதப்பட்டிருந்தது.
அதனை இயக்குநரிடமும், இசையமைப்பாளர்களிடம் காட்டியிருக்கிறார். இது என்ன என்று கேட்ட போது, பாடல் கேட்டீர்களே இது போதுமா என்று கேட்க, அவர்கள் ஒருகணம் ஆச்சர்யப்பட்டனர். ஒரு சிகரெட் அட்டையைக் கூட விடாமல் உடனே நினைவுக்கு வரும் வரிகளை அதில் எழுதியிருக்கிறார். அப்படி உருவான அந்த வரிகள் தான் கண்ணா கருமை நிறக் கண்ணா.. உன்னைக் காணாத கண் இல்லையே.. என்ற புகழ்பெற்ற பாடல்.
இதேபோல் பயணம் செய்யும் காலங்களில் பயணச் சீட்டுகளிலும் எழுதும் பழக்கமும் அவருக்கு இருந்திருக்கிறது. இப்படி கவியரசர் உருவாக்கிய பாடல்கள் ஏராளம்.