சினிமாவில் பழைய காலத் திரைப்படங்களில் காதலன், காதலியைப் பார்க்கும் போது, அல்லது டூயட் பாடல்களில் நடிக்கும் போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் வசனங்கள் தான் அத்தான், நாதா போன்றவை. அதேபோல் பாடல்களிலும் இந்த வார்த்தைகளே காதலனைக் குறிக்க அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த டிரண்டை உடைத்த பெருமை கண்ணதாசனுக்கே சாரும்.
தான் எழுதிய பல பாடல்களில் காதலனுக்கு மட்டும் அத்தான், தலைவா, நாதா போன்ற வார்த்தைகளையும், காதலிக்கு அவள், அன்பே, மலரே என வர்ணித்தும் எழுதியவர் பின்னாளில் முதன்முறையாக ஒரு பாடலில் அவன் என்ற வார்த்தையைப் போட்டு பாடல் இயற்ற பின்னாளில் அந்த பாணியையை பல கவிஞர்கள் இயற்றலாயினர்.
புதுமை இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1964-ம் ஆண்டு வெளியான படம் தான் காதலிக்க நேரமில்லை. பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் ரவிச்சந்திரன் நாயகனாக அறிமுகமான இந்த படத்தில் முத்துராமன், காஞ்சனா, ராஜாஸ்ரீ, சச்சு, நாகேஷ், பாலையா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து இசையமைத்த இந்த படத்திற்கு, கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
பணம் கேட்கப் போன இடத்தில் பாலுமகேந்திராவுக்கு கடன் கொடுக்காத கமல்.. என்ன செய்தார் தெரியுமா?
இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘’அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்’’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 1950-களில் வெளியாக படங்களின் காதலன் உயர்ந்த இடத்திலும், காதலி அவனுக்கு சேவை செய்வது போல், அத்தான் நாதா என்ற வார்த்தைகளுடன் தான் பாடல்கள் வந்திருக்கும்.
அடுத்த 10 ஆண்டுகளில், காதலன் – காதலி இருவருமே சமம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பாடலை கண்ணதாசன் எழுதியிருப்பார். சினிமா 10 ஆண்டுகளில் எவ்வளவு மாறி இருக்கிறது என்பதை இந்த பாடலின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன் என்பது வழக்கமாக இருந்தபோதும், அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன் என்று ஒரு பெண்னே பாடுவது போன் எழுதியிருப்பார்.
இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காதலன் – காதலி இருவரும் தனித்தனியாக தங்களது அறையில் காதல் ததும்ப பாடும் இந்த பாடலின் ஒரு இடத்தில் கூட முகம் சுழிக்கும் அளவிலான வார்த்தைகள் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.