முன்பை விட அதிக பவர்.. அதிக எனர்ஜி.. விரைவில் தாயகம் திரும்பும் கன்னட சூப்பர் ஸ்டார்…

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிவ்ராஜ்குமார் புற்று நோய் சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மியாமி கேன்சர் இன்ஸ்ட்டியூட்டில் கடந்த மாதம் 19-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். கன்னட திரையுலகின் பழம்பெரும் சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரின் மகனான…

Shivraj Kumar

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிவ்ராஜ்குமார் புற்று நோய் சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மியாமி கேன்சர் இன்ஸ்ட்டியூட்டில் கடந்த மாதம் 19-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். கன்னட திரையுலகின் பழம்பெரும் சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரின் மகனான சிவ்ராஜ்குமாரும் கன்னட திரையுலகின் முன்னனி நடிகராக உள்ளார். இவரது சகோதரர் புனித் ராஜ்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பால் இயற்கை எய்தினார்.

கர்நாடக அரசியல் மற்றும் சினிமா உலகில் மிகப்பெரும் ஆளுமைகளாகத் திகழும் சிவ்ராஜ்குமார் குடும்பத்தினர் சமூக சேவைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டு பல நற்காரியங்களைச் செய்து வருகின்றனர். திரையுலகில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சிவ்ராஜ்குமாருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்படவே மருத்துவர்கள் சோதனை செய்ததில் அவருக்குப் புற்றுநோய் தாக்கியிருப்பது தெரியவந்தது.

சிறுநீர்ப்பை புற்றுநோயால் அவதிப்பட்ட சிவ்ராஜ்குமார் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவருக்கு வெற்றிகரமாக மாற்று சிறுநீர்ப்பை பொருத்தப்பட்டு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.

மக்களுக்கு புரியாது.. இத மாத்திட்டு படம் பண்ணு.. கலைஞர் கொடுத்த ஐடியா.. கமலின் தசாவதாரம் ஹிட்டின் பின்னணி..

சிகிச்சைக்குப் பின் நேற்று சிவ்ராஜ்குமார் வெளியிட்ட வீடீயோ பதிவில் தான் முழுவதும் குணமடைந்து விட்டாதாகத் தெரிவித்திருக்கிறார். சிவ்ராஜ்குமாரின் மனைவி கீதா தனது கணவர் விரைவில் குணம் பெற வேண்டி தனது தலைமுடியை கோவிலுக்கு காணிக்கை அளித்திருக்கிறார்.

சிவ்ராஜ்குமார் பேசும் போது எனது ரசிகர்கள், குடும்பத்தினர்கள், நண்பர்கள், மருத்துவர்கள் எனக்கு மன தைரியத்தினைக் கொடுத்திருக்கிறார்கள். கடுமையான நேரத்தில் எனக்குப் பக்கபலமாக கீதா இருந்திருக்கிறார். கீதா இல்லாமல் இந்த சிவண்ணா இல்லை என்றும் உருக்கமாகப் பேசியிருக்கிறார் சிவ்ராஜ்குமார்.

ஜனவரி இறுதி வாரத்தில் மீண்டும் தாயகம் திரும்பவிருப்பதாகவும், முன்பு இந்த சிவண்ணா எப்படி இருந்தேனோ அதைவிட பல மடங்கு சண்டை, நடனம் உள்ளிட்டவற்றில் நடிப்பேன் என்றும், தோற்றத்தில் இரண்டு மடங்கு பவர் இருக்கும் எனவும் ரசிகர்களிடம் தெரிவித்திருக்கிறார் சிவ்ராஜ்குமார்.

சிவ்ராஜ்குமாரைக் கண்ட ரசிர்கர்கள் அவர் விரைவில் முழு குணம் பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர். தமிழில் ஜெயிலர் மற்றும் கேப்டன்மில்லர் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் அன்பையும் பெற்றிருக்கிறார் சிவ்ராஜ்குமார்.