பாலிவுட்டின் பிரபல பாடகி கனிகா கபூர் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். பல நாடுகளுக்கு சமீபத்தில் சுற்றுலா சென்று வந்த இவர் தாஜ் ஹோட்டலில் ஒரு பார்ட்டியும் கொடுத்துள்ளார்.
இதில் முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். பார்ட்டியில் கலந்து கொண்ட 27 பேரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனிகா கபூருக்கு கொரோனா தொற்றை மறைத்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் கனிகா கபூர் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தனி அறையில் தொலைக்காட்சி வசதியுடன் தான் இவர் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.