பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பம் முதலே சண்டைகளுக்கும், சூப்பர் டீலக்ஸ் அணியின் ‘அதிகாரப்’ போக்குக்கும் பஞ்சம் இல்லாமல் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருப்பவர்கள் தாங்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல மற்ற போட்டியாளர்களிடம் நடந்துகொள்வது சக போட்டியாளர்களிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நேற்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி கூட, சூப்பர் டீலக்ஸ் வீட்டில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தை சரியாக பயன்படுத்தவில்லை என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் கனி மற்றும் பார்வதி இடையே நடக்கும் சண்டை காட்சிகள் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்வதி, ஒரு குறிப்பிட்ட விதமாக அமர்வது அல்லது செயல்படுவது குறித்துச் சண்டை வெடிக்கிறது. அப்போது, அருகில் வரும் கனி, பார்வதியிடம் நேரடியாக கேள்வி எழுப்புகிறார்.
பார்வதி , “யாருமே கீச்சனுக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கு என்ன நியாயம்?” என்று கனியிடம் கேட்கிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கனி நேரடியாகப் பார்வதியை வச்சு செய்கிறார்.
கனி பேசியதாவது: “சூப்பர் டீலக்ஸ் உள்ளவர்களுக்கு எந்த கொம்பும் முளைக்கவில்லை. நீங்கள் அநியாயமாக ஒரு விஷயம் செய்தால், அதை யாருமே கேட்கக்கூடாது; பார்க்காமலே போய்விட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அநியாயமாக பண்ணிவிட்டு, அதற்கு காரணம் தேடி ஒரு சீன் கிரியேட் பண்ணினால், நாங்கள் வாயை மூடிக்கொண்டு போக முடியாது. அது யாராலும் முடியாது. நல்ல அறிவு இருக்கிறவங்களுக்கு உள்ள இறங்கும். புத்தி இல்லாதவங்களுக்கு உள்ள இறங்காது. உன்னிடம் பேசுவதும் சுவரிடம் பேசுவதும் ஒன்றுதான்,” என்று வெளுத்து வாங்கினார்.
கனியின் இந்தத் துணிச்சலான பதிலால், பார்வதி வழக்கம் போல் தனது அசிங்கமான உடல் மொழியை மட்டும் வெளிப்படுத்தி பதில் பேச முடியாமல் திணறினார்.
மொத்தத்தில், சூப்பர் டீலக்ஸ் வீட்டின் அதிகாரத் திமிர் எல்லை மீறி போயுள்ள நிலையில், பார்வதியின் கேவலமான அணுகுமுறையும், அவருக்கு எதிராக அதிகரித்து வரும் ஹேட்டர்ஸ்களின் எண்ணிக்கையும் ரசிகர்களை மேலும் கொதிப்படைய செய்துள்ளது. இந்தச் சண்டையின் விளைவுகள் இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
