சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் அமரன். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்களிடையே மிகுந்த பாராட்டுகளை பெற்று வருகிறது.
அமரன் திரைப்படம் வெளியான பத்து நாட்களிலேயே 200 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் 13 நாட்கள் கடந்த நிலையில் உலக அளவில் 250 கோடி ரூபாயும் தமிழ்நாட்டு அளவில் 130 கோடி ரூபாயும் வசூலித்து மாபெரும் சாதனை படைத்திருக்கிறது.
நாளை நவம்பர் 14 சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குவா வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கடந்த ஒரு மாதமாக பிசியாக கலந்து கொண்டு வருகிறார் சூர்யா. இந்த நிலையில் கங்குவா திரைப்படத்திற்கு அமரன் படத்தினால் புதிய பிரச்சினை உருவாகி இருக்கிறது.
அது என்னவென்றால் அமரன் திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் Housefull ஆக தான் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் அமரன் ott வெளியீட்டை தள்ளி வைக்குமாறு கூட திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருக்கின்றனர். இந்நிலையில் அமரன் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் கங்குவா திரைப்படத்திற்கான ஸ்கிரீன் கிடைப்பதில் பிரச்சினை இருந்துள்ளது. அதை சரி செய்து கங்குவா படத்தை அதிக ஸ்கிரீனில் திரையிட தயாரிப்பு நிறுவனம் முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.