கமலுக்கு வில்லனாகிய எஸ் ஜே சூர்யா! எந்த படத்தில் தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வீடியோவை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்துள்ளது. கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் கமல் நடிக்கும் 234 வது படத்தின் பூஜை கூறிய வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு அந்த படத்தின் மீதான ஆர்வத்தை தற்பொழுது ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வீடியோவில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மற்றும் மற்ற பிற நடிகர்கள் மற்றும் இந்த படத்திற்காக பணியாற்றும் டெக்னீசியன் என அனைத்து விவரங்களும் வெளியாகி கமல் ரசிகர்களை கொண்டாட்டத்தில் திக்கு முக்காட வைத்துள்ளது.

இந்நிலையில் கமல் தற்பொழுது நடித்து வரும் இந்தியன் 2 படம் குறித்த அப்டேட்களும் அடுத்தடுத்து போட்டி போட்டு வெளியாக தொடங்கியுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்தில் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிந்துள்ள நிலையில் இந்தப் படத்தின் ரன்னிங் டைம் 6 மணி நேரம் என்பது தகவல் வெளியாகி உள்ளது. எனவே இந்த படத்தை இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரண்டு பாகங்களாக பிரித்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்தியன் 2 வின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், இந்தியன் 3 படத்திற்கான சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. ஒரே பட்ஜெட்டில் இரண்டு படங்கள் எடுக்கப்பட்டதால் லைக்கா தரப்பில் இருந்து பெரும் மகிழ்ச்சியாக இருந்தாலும், இயக்குனர் ஷங்கருக்கு கூடுதலாக 29 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியன் 3 படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிய இன்னும் 40 நாட்கள் தேவைப்படும் என்பதையும் படக்குழு தெளிவுபடுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த முப்பது நாட்கள் படப்பிடிப்புகளின் கமல் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதற்கு பதிலாக டூப் வைத்து படமாக்க படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் அதை கமல் முற்றிலும் மறுத்துள்ளார். இந்தியன் 3 திரைப்படத்திற்கு தேவைப்படும் நாட்களை தர தான் தயாராக இருப்பதாகவும், படத்தில் டூப் வைத்து நடிக்க வேண்டாம் என்றும் தெளிவாக கூறியுள்ளார்.

நவம்பர் 1ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் சம்பவம் செய்ய காத்திருக்கும் தளபதி விஜய்!

அந்த வகையில் இந்தியன் 3 திரைப்படத்திற்காக கமலுக்கு 120 கோடி வரை சம்பளம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியன் 2 படம் குறித்த மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் பல பிரம்மாண்ட நடிகர்கள் இருந்தாலும் படத்தின் வில்லன் குறித்த அப்டேட் தற்பொழுது மாஸாக கிடைத்துள்ளது.

இந்நிலையில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்திற்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்து வருவதாக தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நடிகர் எஸ்.ஜே சூர்யா கடந்த சில காலங்களாக மெர்சல், மாநாடு, டான், மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து படத்தை சூப்பர் ஹிட் ஆக மாற்றி உள்ளார். அந்த வகையில் ஷங்கர் இயக்கம் ரேஞ்சர் படத்திலும் எஸ் ஜே சூர்யா தான் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கமலின் இந்தியன் 2 படத்திலும் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிப்பது தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் நவம்பர் மூன்றாம் தேதி வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருந்த அப்டேட்டில் எஸ் ஜே சூர்யா அவர்களின் சமூக வலைதள பக்கத்தை இணைத்தது அவர் அந்த படத்தில் நடிக்கிறார் என்பதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. பல வருடங்களாக தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி விக்ரம் படத்தை போல கமலுக்கு மீண்டும் ஒரு வெற்றியை கொடுக்கும் என கமல் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.