நவம்பர் 1ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் சம்பவம் செய்ய காத்திருக்கும் தளபதி விஜய்!

தளபதி விஜய் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து வெளியான திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் இந்த மாதம் 19ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக உலக அளவில் அதிகப்படியான திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பல வருடங்களுக்கு பின் திரிஷா இணைந்து நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து இந்த படத்தில் சஞ்சய் தத், சாண்டி மற்றும் பிரியா ஆனந்த், மடோனா, இயக்குனர் மிஷ்கின் என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து மல்டி ஸ்டார் திரைப்படமாக லியோ திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அனிருத் இசையில் அமைந்த அனைத்து பாடல்களும் மாபெரும் ஹிட் கொடுத்தது.

வாரிசு திரைப்படத்திற்கு அடுத்து தளபதி லோகேஷ் உடன் இணைந்து நடிக்கும் லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மனதில் அதிகமாக இருந்தது. ஆனால் இந்த திரைப்படத்திற்கு பிரமோஷன் பணிகள் பெரிதளவில் நடைபெறவில்லை. குறிப்பாக இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாக இருந்து பின் ரத்து செய்யப்பட்டிருந்தது. லியோ திரைப்படத்தின் ஆடியோ லான்ச் முதலில் நேரு ஸ்டேடியத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

அதன் பின் சில காரணங்களினால் அது ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளை முழுக்க முழுக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்து வந்தார். அதைத்தொடர்ந்து இந்த திரைப்படம் வெளியாகி தற்பொழுது மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது. திரைப்படம் தற்போது வரை 470 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா குறித்த ஒரு தரமான அப்டேட் கிடைத்துள்ளது. ஆடியோ லான்ச் நடைபெறாத பட்சத்தில் இந்த படத்தின் வெற்றி விழாவை மிகச் சிறப்பாக கொண்டாட தயாரிப்பு தரப்பில் இருந்து லலித் அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆடியோ லாஞ்சின் போது தளபதி கூறும் குட்டி ஸ்டோரியை மிஸ் செய்த அவரது ரசிகர்கள் இந்த வெற்றி விழாவின் போது அதை கேட்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தளபதி 68 படத்தில் இணைந்த அஜித் பட ஹீரோயின்! அதுவும் அவருக்கு ஜோடியாகவா?

மேலும் இந்த விழாவிற்கு தளபதி விஜய் கண்டிப்பாக கலந்து கொள்ள உள்ளதாகவும் மேலும் படத்தில் நடித்த பல பிரமாண்ட நடிகர்கள் இணைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விழாவின் போது எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் ரசிகர்களின் எண்ணிக்கை மற்றும் திரை பிரபலங்களின் வருகை ஆகியவை குறித்த தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வெற்றி விழாவில் தளபதியை பார்ப்பதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கும் பட்சத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணத்தில் இதை நடத்தி முடிக்க தயாரிப்பு தரப்பில் இருந்து பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...